Home சூடான செய்திகள் ‘கஹானி’ நாயகியாக நான் நடிக்கவில்லை: சினேகா

‘கஹானி’ நாயகியாக நான் நடிக்கவில்லை: சினேகா

59

வித்யாபாலன் நடித்த கஹானி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று சினேகா கூறியுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணிப் பெண் வித்யாபாலன், தொலைந்து போன தன் கணவனைத் தேடி இந்தியா வருவது போல கஹானி படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

தி டர்ட்டி பிக்சர் படத்தினை விட கஹானி அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தினை ‘கஹானி’ படம் தக்க வைத்து கொண்டுள்ளது.

ஒரு படம் வரவேற்பை பெற்றால் அப்படத்தினை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். அவ்வரிசையில் தற்போது ‘ கஹானி ‘ படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தயாரிப்பாளர்கள் முன்வரிசையில் நிற்கிறார்கள்.

தமிழில் வித்யாபாலன் வேடத்தில் சினேகா நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் சினேகா அப்படத்தில் நடிப்பது குறித்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.