சீனாவில் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் அந்தப் பெண்ணை நிர்வாணமாக பயணப் பை ஒன்றில் அடைத்து பூங்கா ஒன்றில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
நள்ளிரவில் அந்த வழியால் ஒருவர் வந்துகொண்டிருந்தபோது தரையில் கிடந்த பெரிய பை ஒன்றில் இருந்து ஒரு பெண் அழும் சத்தம் கேட்டதும் அந்தப் பெட்டியை அவர் திறந்து பார்த்துள்ளார்.
அதற்குள் நிர்வாணமாக பெண் ஒருவர் இருந்துள்ளார்.உடனடியாக தனது டீ-சேர்ட்டைக் கழட்டி அந்தப் பெண்ணுக்கு கொடுத்துவிட்டு பொலிஸிற்குத் தகவலைக் கொடுத்துள்ளார்.பொலிஸார் வந்து அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்ததோடு சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.