Home சமையல் குறிப்புகள் கறுப்பு உளுந்து அடை

கறுப்பு உளுந்து அடை

33

தேவையான பொருட்கள் :
15

புழுங்கல் அரிசி – 250 கிராம்
கறுப்பு உளுந்து – 100 கிராம்
துவரம்பருப்பு – 1 கப்
வெங்காயம் – பெரியது 2
காய்ந்த மிளகாய் – 5
இஞ்சி – சிறு துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும

உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, வெங்காயம் சேர்த்துக் அடை மாவு பதத்தில் தயாரிக்கவும்.

• தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு :

1. கறுப்பு உளுந்து, புரதச் சத்து மிக்க தானியம் ஆகும்.

2. பருவமடையும் பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவேஸ துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கறுப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.