Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலமும் கருச்சிதைவும் – கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்.. மேலும் அறிய...

கர்ப்ப காலமும் கருச்சிதைவும் – கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்.. மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும்

34

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், தங்கள் குடும்பத்தில் புதிதாக வரவிருக்கும் மற்றொரு ஜீவனை வரவேற்க தயாராக வேண்டும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக, உங்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் பல சந்தோஷங்களை நீங்கள் இழக்க வேண்டியிருப்பதால், இந்த காலம் உங்களுக்கு சோர்வுடையதாக இருக்கும். பிறக்க போகும் குழந்தை, திடீரென உங்கள் வாழ்வின் மையப்புள்ளியாக மாறி விடும். கருச்சிதைவு என்பது எந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் சந்திக்கும் மோசமான அனுபவமாகும். கருச்சிதைவு ஏற்படும் போது, உங்கள் வாழ்வே சூனியம் ஆனதை போல் உணர்வீர்கள். இனி வாழ்க்கையையே இல்லாததை போலும் தோன்றும்.

கருச்சிதைவு என்பது கருவுற்ற ஆரம்ப காலத்திலும் நடக்கும், கடைசி காலத்திலும் நடக்கும். பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

கருச்சிதைவு ஏற்படுவதை பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. விளையாட்டில் ஈடுபடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா என்பதும் அதில் ஒன்றாகும். கர்ப்பமாக இருக்கும் போது, தனியாக விளையாடும் விளையாட்டுக்கள் அல்லது பிற நபர்களுடன் குறைந்த அளவில் தொடர்பில் இருக்கும் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் பாதுகாப்பாக விளையாடலாம். அப்படியானால் பிறருடன் அதிக தொடர்பில் இருக்கும் விளையாட்டுக்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா என்பது தான் உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும்.

ஆம், அப்படிப்பட்ட சூழ்நிலையில், கருச்சிதைவு ஏற்படும் இடர்பாடு அதிகமாக இருக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள், தங்களின் கர்ப்ப காலம் முழுவதிலும், அவ்வகை விளையாட்டுக்களை விளையாடாமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

கர்ப்பிணி பெண்கள் ஈடுபடும் சில விளையாட்டுகளில் உள்ள நன்மைகளையும் தீமைகளையும் பற்றி இப்போது பார்க்கலாமா?

நீச்சல் நீங்கள் மெதுவாக நீந்த விரும்பும் கர்ப்பிணி பெண்ணா?

அப்படியானால், ‘கருவுற்ற காலத்தில் நீச்சலில் ஈடுபட்டால், கருச்சிதைவு ஏற்படுமா?’

என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று தான் வரும். கர்ப்ப காலம் முழுவதும் இந்த விளையாட்டில் பாதுகாப்பாக ஈடுபடலாம். ஆனால் மூச்சை அடக்கி செய்யும் கடுமையான நீச்சலில் ஈடுபடாதீர்கள். வெளிப்புறத்தில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் கர்ப்பமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, வெளிப்புறத்தில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் என்றாலே பெண்களுக்கு கொள்ளை பிரியம் தான். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இந்த விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, தங்களை அதிகமாக வருத்திக் கொள்ளாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். ‘கருவுற்ற காலத்தில் வெளிப்புறத்தில் விளையாடப்படும் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், கருச்சிதைவு ஏற்படுமா?’ என்ற கேள்விக்கு,

விளையாட்டை விரும்பும் அனைவருமே, இல்லை என்று தான் பதில் கூறுவார்கள். ஜாக்கிங் கர்ப்ப காலத்தின் போது, உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்சனை ஏதும் இல்லையென்றால், ஜாக்கிங் செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது. அதனை மிதமாக செய்யும் வரைக்கு, உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

‘கருவுற்ற காலத்தில் ஜாக்கிங் செய்தால் கருச்சிதைவு ஏற்படுமா?’ என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் தான் மீண்டும் வரும். பந்தாட்ட மட்டை விளையாட்டுக்கள் டென்னிஸ் மற்றும் இறகுப் பந்தாட்டம் போன்ற பந்தாட்ட மட்டை விளையாட்டுக்கள் விளையாடும் போது, பிறரோடு குறைந்த அளவிலான தொடர்பு மட்டுமே ஏற்படும். அதனால், கர்ப்பமாக இருக்கும் போது அதிக சிரத்தை இல்லாமல் இவ்விளையாட்டுக்களை பாதுகாப்பாக விளையாடலாம்.

‘கருவுற்ற காலத்தில் பந்தாட்ட மட்டை விளையாட்டுக்களை விளையாடினால் கருச்சிதைவு ஏற்படுமா?’ என்ற கேள்விக்கு மறுபடியும் இல்லை என்பது தான் பதில். அதிக தொடர்புடைய விளையாட்டுக்கள் அதிக தொடர்புடைய விளையாட்டுக்களை கர்ப்பிணி பெண்கள் விளையாடினால் கருச்சிதைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு கண்டிப்பாக ஆம் என்று தான் பதில் வரும்.நீங்கள் கர்ப்பமாக இருந்தீர்கள் என்றால், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அதிக தொடர்புடைய பிற விளையாட்டுக்களை விளையாடாதீர்கள்.

கர்ப்ப காலத்தில்அவை ஆபத்தை விளைவித்து விடும். பளு தூக்குதல் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக விளையாடக் கூடாத மற்றொரு விளையாட்டு பளு தூக்குதல். ‘கருவுற்ற காலத்தில் பளு தூக்கும் விளையாட்டை விளையாடினால் கருச்சிதைவு ஏற்படுமா?’ என்ற கேள்விக்கு கண்டிப்பாக ஆம் என்று தான் பதில் வரும். அதற்கு காரணம் கனமான பொருட்களை தூக்குவதாலேயே. தீர விளையாட்டுக்கள் தீர விளையாட்டுக்கள் விளையாடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு மறுபடியும் ஆம் என்ற பதில் தான் வரும். தண்ணீரில் ஸ்கையிங், பாராஷூட், ஸ்கூபா டைவிங் மற்றும் மார்ஷியல் கலைகள் போன்றவைகள் இதில் அடக்கம். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக இவ்வகை விளையாட்டுக்களில் ஈடுபட கூடாது.

கர்ப்பம் என்று வந்து விட்டால் யாருக்குமே ரிஸ்க் எடுக்க பிடிக்காது. அதனால் எந்த விளையாட்டில் ஈடுபட்டாலும் நீங்கள் அதற்கு மருத்துவ ரீதியாக தகுதியாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.