Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு! உங்கள் மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும்!

கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு! உங்கள் மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும்!

32

மனஅழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் காணப்படுவது, குழந்தைகளுக்கு ஆபத்தை அளிக்கும். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் இருப்பதால், தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும். அதுபற்றி இந்த பகுதியில் காணலாம்.

தாய்ப்பால் :
தாய்ப்பால் கொடுப்பது குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. தாய் மனது அல்லது உடல் அளவில் பாதிக்கப்பட்டால், அது அவளது குழந்தையையும் தான் பாதிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.

தாமதம்
தாய் மிக மன அழுத்தத்துடன் இருந்தால், தாய்ப்பால் சுரக்க தாமதமாகும். ஒரு சில பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக, குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் சுரக்க 2-3 நாட்கள் கூட ஆகலாம்.

ஒரு மணிநேரத்திற்குள்..
குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் சுரக்கும் தாய்ப்பாலில் அனைத்து சத்துக்களும் உள்ளன. அதனால் தான் குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகிறது.

வேண்டாம்!
எனவே கர்ப்ப காலத்திலும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். மன வளம் தான் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.