Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான சில அட்வைஸ்..!

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில அட்வைஸ்..!

33

belly
belly
தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம்.

முழு பருப்பு வகைகள், முளை கட்டின பருப்பு வகைகள் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். பால் /இறைச்சி/முட்டை போன்ற உணவுகளை எடுத்தும் கொள்ளலாம்

பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக அதிகளவில் உட்கொள்ளலாம். மதுவகைகள் மற்றும் புகையிலை போன்றவை உட்கொள்ளக்கூடாது

மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தினை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் 14-16 வாரங்கள் தொடங்கி தாய்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரை இரும்புச் சத்து, போலேட் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை கூடுதலாக தொடர்ந்து அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்

உணவுக்கு முன்னும் மற்றும் பின்னும் தேனீர் (டி) மற்றும் காப்பி போன்ற பானங்கள் உட்கொள்வதினால் உணவில் உள்ள இரும்புச் சத்தானது கிடைப்பது இல்லை.

எனவே மேற்கூறிய பானங்களை உணவிற்கு முன்னும் பின்னும் தவிர்ப்பது மிக அவசியம்.

கர்ப்பிணி பெண்களுக்கு நடைபயிற்சி மற்றும் பிற தேவையான உடற்பயிற்சிகள் தேவை.

அதிக வேலைகள் செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கடைசி மாதத்தில் தவிர்க்க வேண்டும்.