Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகள் மது அருந்துவதால் பாதிக்கப்படும் குழந்தைகள்!!!

கர்ப்பிணிகள் மது அருந்துவதால் பாதிக்கப்படும் குழந்தைகள்!!!

23

குழந்தைகள் வீட்டில் விளையாடும் அழகினைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது. அத்தகைய குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு பெண்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகின்றனர். ஆனால் சில பெண்கள் கருவுற்றிருக்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் மது அருந்துகிறார்கள். இது அவர்களின் குழந்தைகளை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மது பெண்களின் கருவில் படரும்பொழுது, அது தீராத பல நோய்களை உருவாக்குகிறது. இது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுகையில், 2.4 முதல் 4.8 சதவீத குழந்தைகள் மது நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று தெரியவந்தது.

குடிப்பது தவறு என்று தெரிந்தும் குடிக்கும் பெண்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? இதற்குக் காரணம் அவர்களின் மன அழுத்தம் அல்லது குடிப்பழக்கத்தினை விட முடியாத நிலையாக இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மது பழக்கத்தினால் வரும் நோய்கள் மிகவும் கடுமையான விளைவுகளை எற்படுத்தும். முக அமைப்பில் வித்தியாசம், மூளை வளர்ச்சி இல்லாமை, வளரும் குறைபாடுகள் மற்றும் நடந்து கொள்ளும் முறையில் குறைபாடு என நிறைய குறைபாடுகள் உருவாகும். குடியினால் வரும் நோயால் சில குழந்தைகளால் பள்ளியில் சரிவர செயல்பட முடியாமல் திணறவும் செய்கிறார்கள்.

ஊர் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள்:
பிலிப் மே, எனும் மருத்துவர் அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் ஆராச்சிக்காக சென்றிருந்தார். அந்த ஊரை மற்ற ஊர்களுடன் ஒப்பிடும்போது, குடிப்பழக்கம் வருடத்திற்கு 14 சதவீதம் அதிகமாக இருந்தது. அந்த ஊரில் 32 பள்ளிகளில் இருந்து சுமார் 2000 மாணவர்களை ஆராய்ந்தார். அதில் 25 சதவீத வளர்ச்சி இருக்கும் குழந்தைகளையும், நல்ல சீரான வளர்ச்சி உள்ள மாணவர்களையும் தனியாக பிரித்து, அவர்களுக்கு ஞாபகம் மற்றும் யோசிக்கும் திறனிற்க்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்தில் 6 முதல் 9 வரையான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆயிரத்தில் 11 முதல் 17 வரையான மாணவர்கள் சற்றுக்குறைவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விவரங்கள் தெரிவித்தன. இந்த தேர்வில் உடலில் குறைபாடுகள் உள்ள மாணவர்களையும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் சிறிய தலையுடனும், குறைவாக கண்களை திறக்கும் குறைபாட்டுடனும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புள்ளி விவரங்கள் கூறுவது என்னவென்றால், குழந்தைகளை FASD நோய் வெகுவாக பாதித்திருக்கிறது என்பதைதான். இதற்கு காரணம் அவர்களின் தாய் அவர்கள் கருவுற்றிருந்ததற்க்கு 3 மாதங்களுக்கு முன்பே மது அருந்துவதும், அவர்களின் கணவன்மார்களின் அதிகப்படியான குடி பழக்கமும் தான்.

அதிக நாடுகளில், பெண்கள் கருவுற்றிருக்கும்போது அவர்கள் குடும்பங்கள் மது அருந்துவதை ஊக்கப்படுத்துவதும், அதனால் பெண்களின் மது பழக்கம் அதிகமாக வாய்ப்பை உருவாக்கி தருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருவில் குழந்தை இருக்கும் போது குறைவாவோ அல்லது நிறைவாகவோ மது அருந்துவது முற்றிலும் தவறு என்பதை தாய்மார்கள் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை காக்க வேண்டும் என்பது இன்றய மருதுவர்களின் உண்மை கருத்து.