கருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது. மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் நேரடியாகவும் சரி சில வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில், இது அவர்களை மனதளவில் பாதிப்படைய வைக்கலாம். பிரசவிக்கும் போது வலி அதிகம் ஏற்படும், நீ தாங்கிக் கொள்வாயா? என்பது போல கர்ப்பிணி முன்பு பேசவே கூடாது. இது அவர்களை மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதிரி வயிறு வெளியே தெரியும். அதற்காக வயிறு மிகவும் சிறியதாய் இருப்பது போல தெரிகிறது, மருத்துவரிடம், குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறதா என கேளு. என்பது போல பேச வேண்டாம். மாதா மாதம் பரிசோதிக்கும் மருத்துவர் அதை கூறிக் கொள்வர். நீங்கள பயமுறுத்த வேண்டாம். மருத்துவரிடம், குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறதா என கேளு. என்பது போல அவர்களிம் அடிக்கடி பேசாதீர்கள்.
மாதா மாதம் பரிசோதிக்கும் மருத்துவர் அதை அவர்களிடம் கூறிக் கொள்வர். நீங்கள பயமுறுத்த வேண்டாம். முடியாது, கடினம், தோல்வி, நஷ்டம் என்பது போல எப்போதும் கர்ப்பிணி முன்பு பேச வேண்டாம். கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறான வார்த்தைகளை மட்டுமே கேட்கும் போது அதன் குணாதிசயங்கள் மாறுபட வாய்ப்பிருக்கிறது.
வயிறு பெரிதாய் இருந்தால் ஆண், இல்லையென்றால் பெண் என நீங்களாக எதையும் கொளுத்தி போட வேண்டாம். இதுப் போன்ற ஆசைகள் அதிகரித்து, பிறகு வேறு குழந்தை பிறக்கும் போது மனதளவில் பெண் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன. சாப்பாடு விஷயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கா, பரவலா கொஞ்ச நாள் தான் என கூறி, அவர்களது ஏக்கத்தை அதிகரிக்க வேண்டாம். இதுவும் கர்ப்பிணி பெண்களின் மனதை பாதிக்கவல்லது.