தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கர்ப்பப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்…
• இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
• ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
• எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.
• பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை
• அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்
• சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு
• அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்
• சிறுநீரை அடக்க முடியாத நிலை.
• தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை
• மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
– இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளைமேற்கொள்வது நல்லது.