Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

25

Captureபெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள்.

ஒவ்வொரு கணவரும், மனைவியும் அவர்களின் உள்மனதினுடைய பயங்களையும், உணர்வுகளையும் அடிக்கடி அவர்களுடனே வைத்துக் கொள்வார்கள். முக்கியமாக அது முதல் குழந்தையாய் இருந்தால், உங்கள் கர்ப்ப காலம் ஒரு மாறுபட்ட, மனநிலை ஊசலாடும் காலமாயிருக்கும்.

இது பெண்களுக்கும், அவர்கள் கணவருக்கும் பொருந்தும். தாய்மார்கள் சோர்வடைதல், உற்சாகமடைதல், ஆவலோடிருத்தல், தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், பயந்து இருத்தல், தாய்மை உணர்வோடும் அழகாகவும் இருத்தல் போன்ற எண்ணங்களோடு இருப்பர்.

கணவன்மார்கள் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகிறோம் என்ற பெருமையோடும், புதிய பொருளாதாரப் பொறுப்புகளைப் பற்றிய கவலையோடும், குழந்தை வளர்ச்சியைப் பற்றிய புதிய சிந்தனைகளோடும் இருப்பர்.

இத்தகைய உணர்ச்சி மாற்றங்கள் ஒருவரின் மீது ஒருவருக்கு அவரவரின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு அதேபோல செக்ஸ் விஷயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது அதைப்பற்றி எவ்வளவு சொற்பமாகச் சிந்திக்கிறீர்கள் என்பதோ அல்லாமல் நீங்கள் எப்படி ஒருவரோடு ஒருவர் அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதாகும். இவ்வழியில் நீங்கள் செக்ஸ் உறவுகளுக்கான தேவையான மாறுதல்களையும், அமைப்புகளையும் செய்துகொண்டால், இருவரும் அவ்வுறவைத் தொடர்ந்து அனுபவிக்கலாம்.