Home பெண்கள் அழகு குறிப்பு கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

15

Captureகறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது. அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.

ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

கருப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம். உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும்.

வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.