புழுங்கலரிசி – 2 கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப்,
ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை.
செய்முறை:
அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள். நன்கு புளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள். கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுங்கள். மிகவும் சுவையான இட்லி இது.
குறிப்பு:
மாவு அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தூள் சேர்த்தும் செய்யலாம்.