Home பாலியல் கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு . . .

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு . . .

17

images (1)பெருங்காயம், நம் வீட்டில் அன்றாடம் சமையல் செய்யும்போது உண வோடு சிறிது பெருங்காயத்தை சேர்ப்ப‍ர். இது சுவைக்காக
மட்டுமல்ல‍. ஆரோக்கியத்திற்காகவும் தான். இந்த பெருங்காயம் பெண் களுக்கு ஒரு சிறந்த மாமருந்து என்றாலும் இதன‌ கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.

மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாத விடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க் கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாத விடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.