Home பெண்கள் தாய்மை நலம் கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்

கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்

40

கருவுற்ற பெண் முதல் 3 மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கரு வளராமல் அழிந்து விடும். கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் ரத்த போக்கு ஏற்படும். நஞ்சு கீழே இறங்கி இருக்க கூடாது.

 

இது போன்ற பிரச்சனைகள் துவக்க காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். இல்லையெனில் கை கால்கள் ஊனத்துடன் குழந்தை பிறக்கும். மூளை வளர்ச்சி குன்றியதாக இருக்கும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களை திருமணம் செய்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 30 வயதுக்கு மேல் கருவுற்றால் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இப்பிரச்சனையை கவனிக்காவிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.

இது போன்ற பிரச்சனைகளை என்டி ஸ்கேன் மூலம் அறிந்து அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை அளித்தால் தாய்- சேய் இருவரையும் காப்பாற்றி விடலாம். கருவுற்ற 12 வாரங்களில் கருப்பையில் இருக்கும் குழந்தை மூளைவளர்ச்சி அடைந்து விடும்.

கருவுற்ற பெண் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்து குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். முதல் மூன்று மாதங்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பஸ், ஆட்டோ, கார் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள கூடாது.

பயணம் செய்வதாக இருந்தால் ரெயிலில் மேற்கொள்ள வேண்டும். 20-30வயதுக்குள் குழந்தை பெற்று கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பருவ காலத்தில் தான் பிரச்சனைகள் என்பது மிகவும் குறைவாக இருக்கும். பிறக்கும் குழந்தையும் நல்ல ஹெல்த்தாக இருக்கும்.

19 வயதுக்கு கீழும், 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் முடிந்த தம்பதிகள் குழந்தை பிறப்பதை தள்ளிப்போடக்கூடாது. லேட்டாக குழந்தை பெற்று கொள்ளலாம் என்று பலர் நினைப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும்.

22 வயதில் இருந்து 29 வயதுக்குள் இரு குழந்தைகளை பெற்றால் அந்த குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும். 4 மாதம் முதல் 7 மாதம் வரை கருப்பையில் உள்ள கரு முழு வளர்ச்சி பெற்று விடும். 22- 24 வாரங்களில் இருதயம் வளர்ச்சி பெற்று குழந்தையின் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

இந்த காலத்தில் தான் பிரசர், சுகர் போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். மாதம் ஒரு முறை உரிய மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு இரு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். 5வது மாதத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை 500 கிராம் இருக்கும்.

8வது மாதத்தில் தான் குழந்தை முழு வளர்ச்சி பெற்று இருக்கும். 7வது மாதத்தில் இருந்து பிரசவமாகும் வரை எந்தவிதமான பயணத்தையும் மேற்கொள்ள கூடாது. கருவுற்ற பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி தேவைப்பட்டால் மட்டுமே பயிற்சி செய்யலாம்.

மற்றபடி நடைபயிற்சி தான் சிறந்தது. நஞ்சு கொடி சுற்றிஇருந்தால், துடிப்பு குறைந்து காணப்பட்டால் சுகபிரசவம் ஏற்படுவதில் பிரச்சனை உருவாகும். இதனை சிசேரியன் ஆப்ரேசன் மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும். 7வது மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்வது நல்லது.

பிறக்கும் குழந்தையின் சாதாரண எடை என்பது 2.8 முதல் 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தால் எந்தவித பாதிப்பும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் செக்கப் செய்து கொள்ளலாம்.

கருவுற்ற பெண்கள் உப்பு, இனிப்பு, ஊறுகாய் உட்கொள்ள கூடாது. இனிப்பு அதிகமாக உட்கொண்டால் எடை அதிகரிக்கும். இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி உண்டானால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். 4வது மாதத்தில் இருந்து இருந்து ரத்தம் விரித்தியாக்கும் மாத்திரை, அயன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் தலா ஒரு மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். அயன் மாத்திரைகளை உட்கொண்டால் குழந்தை கறுப்பு நிறத்தில் பிறக்கும் என்பது தவறானது. கரு உருவாகி 3 மாத்திற்கு மேல் குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை இவற்றினை உட்கொள்ளலாம். தாய் பால் நன்றாக சுரக்கும்.

குழந்தையின் எலும்பு வளர்ச்சியும் நன்றாக இருக்கும். மீன், முட்டை, சோயா பீன்ஸ், சிக்கன் போன்ற புரத சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளலாம். ஜூஸ் வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உயரம் குறைவான பெண், இடுப்பு அளவு மிகவும் குறுகியதாக இருந்தால் சுகபிரசவம் ஏற்படுவதில் சிரமம் இருக்கும். ஆண், பெண் குழந்தை ஆகியவை உரிய காலத்தில் தான் பிரசவமாகும்.