Home உறவு-காதல் கண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்!

கண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்!

23

முத்தம் என்பது காதலின் தொடக்கம். எந்த ஒரு செயலுமே தொடக்கம் சரியாக இருந்தால் பாதி வெற்றி பெற்றதற்கு சமம். தாம்பத்ய உறவிற்கான முதல் திறவுகோல் முத்தம்தான். சிலர் அதிலேயே சொதப்பிவிடுவார்கள். அப்புறம் என்ன உற்சாகம் வடிந்து காதல் ஆர்வம் ஓடியே போய்விடும். முத்தமிடுவது கூட ஒரு கலைதான் அதை சிறப்பாக செய்தால் மற்ற செயல்களை சரியாக அமையும். முத்தமிடுவது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

கண்களால் கவருங்கள்

காதலை வெளிப்படுத்த கண்கள்தான் சிறந்த வழி. எனவே நெருக்கமான தருணங்களில் விழிகளின் வழியே உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அப்புறம் என்ன சிக்னல் கிடைத்தால் முத்தமிட ஆரம்பிக்கவேண்டியதுதானே.

முத்தமிட சரியான இடம்

புன்னகை தவழும் இடம் இதழ்கள். அந்த இதழ்களில் முத்தம் என்னும் முத்திரையைப் பதிப்பது சாதாரண விசயமல்ல. எந்த இடத்தில் முத்தமிடப் போகிறோமோ அதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யவேண்டும். தேவையற்ற பகுதிகளை கண்களில் இருந்தும் மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள். பின்னர் துணையின் புன்னகை மூலம் அனுமதி கிடைத்த உடன் மெதுவாக முத்தமிடுங்களேன்.

ரிலாக்ஸ் ஆக இருங்கள்

எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்வது அவசியம். அது முத்தத்திற்கும் பொருந்தும். துணையின் தலையை பிடித்து கூந்தலை கோதி ரிலாக்ஸ் செய்யுங்கள் பின்னம் லேசாக கழுத்தை சாய்த்து வளைத்து சின்னதாய் முத்தமிடுங்கள். முத்தமிடுவதற்கு முன்பாக உதட்டினை சற்றே ஈரப்படுத்துங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சரியான பொசிசனுக்கு கொண்டு வந்து முத்தமிடுங்கள். முத்தமிடும்போதோ, முத்தத்தை பெறும்போதோ கண்களை திறந்து வைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் அது சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும். லேசாக கண்களை மூடி அனுபவியுங்கள் இதுதான் சரியான முத்தம் என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதானே?.