கணவன்- மனைவியிடையே மன அழுத்தம் இருந்தால் அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களை அறியாமலே அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
மன அழுத்தமும், சோர்வும் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக இருந்து கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இருக்கும் போது உறவு வைத்துக்கொண்டால் உறவு திருப்தியில்லாமால் தோல்வியில் முடிகிறது.
மன அழுத்தத்தை நீக்கி, உறவை நன்றாக அமைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்:
அலுவலகத்திலோ, வெளி இடத்திலோ, வீட்டிலோ நடக்கும் பிரச்சினைகளால் உருவாகும் மன அழுத்தத்தை படுக்கைஅறை வரை கொண்டு செல்லக்கூடாது. தம்பதி களிடையே கருத்து வேறுபாடோ, மன அழுத்தமோ இருந்து கொண்டிருக்கும்போது உறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலே செக்ஸ் சந்தோஷத்தை தரும். இல்லாவிட்டால் செக்ஸ் ஒரு சடங்கு சம்பிரதாயம் போல் மாறி விடும்.
கணவருக்கு பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்தால் அதை மனைவியிடம் மனம் விட்டு சொல்ல வேண்டும். அது போல் மனைவியின் பிரச்சினைகள் கணவரிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் இன்னொருவரிடம் வெளிப்படுத்தும்போது மனபாரம் குறைந்து, அவர்களிடையே மனநெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையை தம்பதி கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். இப்படி எதிர் கொள்கிறவர்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள முடியும்.
மனதையும், உடலையும் இலகுவாக்கும் யோகா, மனதை அமைதிப்படுத்தும் `டீப் பிரீத்திங் எக்சசைஸ்’ போன்றவை மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகால். மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மூன்று நிமிடங்களாவது மூச்சைப் பிடித்து வையுங்கள். பின்பு உள்ளே இழுத்ததைவிட அதிக நேரம் எடுத்து, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இந்த பயிற்சியை கணவர்- மனைவி இருவருமே செய்தால், உட லுக்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். அதன் பின்பு அவர்கள் உறவில் ஈடுபடுவது நல் லது.
மன அழுத்தத்திற்கு மசாஜ் சிறந்த மருந்து. வெளியே போய் மசாஜ் செய்வதைவிட, கணவருக்கு, மனைவியும்- மனைவிக்கு, கணவரும் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்பு வைத்திருப்பதை இது உணர்த்தும். இதன் பின்பு உறவில் ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை தரும்.
தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல செக்ஸ்க்கு உடற்பயிற்சி மிக அவசியம். செக்ஸ் சக்தி யையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சரியான முறையில் சீரமைக்க உடற்பயிற்சியால் முடியும்.
மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் போல் செக்ஸ் செயல்பாடு அமைகிறது. ஆனால் செக்சில் ஈடுபடும் ஆர்வம் கணவன்- மனைவி இருவருக்குமே இருக்க வேண்டும். மனம் திறந்த பேச்சு, வெளிப்படையான அன்பு, நம்பிக்கை போன்றவை நல்ல உறவுக்கு அடித்தளம் அமைத்து தரும்.