Home சமையல் குறிப்புகள் ஓட்ஸ் இட்லி

ஓட்ஸ் இட்லி

27

என்னென்ன தேவை?
sl3283-300x196
ஓட்ஸ் – 1 1/2 கப்,
ரவை – 3/4 கப்,
உப்பு – 1 1/2 டீஸ்பூன்,
தயிர் – 3/4 கப்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2,
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு,
தண்ணீர் – 3/4
டம்ளர், கடுகு – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் ஓட்ஸை 2, 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். ரவையை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்து ரவையுடன் கலக்கவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து ரவை-ஓட்ஸ் கலவையுடன் சேர்க்கவும். அத்துடன் பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி, தயிர் சேர்த்து, பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் வேக வைத்து எடுக்கவும்