ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும்.
மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத் தீர்க்க நமது உலகில் பல சாதரண வழிகள் கையாளப்படுகின்றன. இவை:
• முதலில் உடம்புக்குத் தேவையான, சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள். புரதம், இரும்புச்சத்து உள்ள உணவுகள் மிகவும் முக்கியம். பூசணிக்காய், பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், முருங்கைக்காய், புடலங்காய், பாவக்காய் மற்றும் வெள்ளரிக்காய் நல்லது. புதிய, பசுமையான அன்று சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள். ஜங்க்ஃபுட் மற்றும் எல்லா பதனிடப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.
• 2 முதல் 4 மாதங்கள் வரை தினமும் புதிதாக பிழியப்பட்ட காரட் சாற்றை குடிங்கள்.
• சிறிது இஞ்சிச்சாற்றில் தேனைக் கலந்து குடிங்கள்.
• இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வெந்தயம் உதவுகிறது.
• எள்ளும் மிக நல்லது.
• பெருங்காயமும் ஃப்ரோஜெஸ்ட்ரோன் என்ற பெண் பாலியல் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து உதவுகிறது.
• புதினாத் தூளையும் தேனையும் சம அளவில் கலந்து தினமும் 3 முறை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை தீரும்.
இந்த முறைகளை 2 மாதங்கள் வரை பயன்படுத்தியும் பிரச்சினை தீராவிட்டாலோ, அதிக இரத்தப்போக்கு, இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தக்கசிவு மற்றும் மிக வலியுள்ள மாதவிடாய் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.
பெண்களே மாதவிலக்கு பிரச்சினைக்கு தீர்வு இதோ..
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக பெண் குழந்தைகள் தற்போது 10 வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு முகத்தில் பரு, மார்பகத்தில் வலி மற்றும் மனதில் ஒரு வித டென்ஷன் என பெண்கள் மத்தியில் இதற்கான அறிகுறிகள் வேறுபடுகிறது. மாத விலக்கு சமயத்தில் பெண்கள் சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும். மாதவிலக்கு காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை வயிற்று வலி. அடிவயிறு, இடுப்பு, பின்பகுதி, தொடை வரை இந்த வலி பரவும். இத்துடன் வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் முதல் இரண்டு நாட்கள் லேசான வலி ஏற்படுவது இயல்பானது. பல்வேறு காரணங்களால் அதிக வலி ஏற்படுகிறது. கர்ப்பப் பை சுவர்களின் பைப்ராய்டு கட்டி கள், பால்வினை நோய், கருப்பைக் கட்டி அல்லது நீர்க்கட்டி போன்ற காரணங்களால் அதிக வலி ஏற்படலாம். இது போன்ற சங்கடங்களில் இருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது குறித்து விளக்கம்
ஹார்மோன் மாறுபாட்டின் காரணமாக சில பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இது அடிப்படையில் பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம், மனநல பாதிப்பு, எடை மாறுபாடு போன்ற காரணங்களாலும் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. மூன்று மாதங்களுக்கும் மேல் மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மாதவிலக்கு சுழற்சியின் இடைவெளியில் சில பெண்களுக்கு ரத்தப் போக்கு ஏற்படுவது உண்டு. இது தானாகவோ, உறவுக்குப் பின்னரோ ஏற்படலாம். ஹார்மோன் பிரச்னையால் இது போல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனஅழுத்தம், புதிய கருத்தடை மாத்திரை, கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றால் மாதவிலக்கின் இடையில் ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. புற்றுநோயின் அறிகுறியாக வும் இருக்கலாம். மாதவிலக்கு பிரச்னைகள், உடல் மற்றும் மனரீதியான சங்கடங்களை பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. எனவே மாதவிலக்கில் சிறிய மாறுதல் தெரிந்தாலும் உடனடியாக சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து விடலாம்.
பாதுகாப்பு முறை: சிறு வயது முதலே பெண்கள் சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கு தகுந்தாற்போல் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கின் போது இளஞ்சூடான தண்ணீரில் குளிப்பது மற்றும் சிறிய பயிற்சிகள் மூலம் வலியை குறைத்துக் கொள்ளலாம். மாதவிலக்கின் போது சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மாதவிலக்கு தேதியை குறித்து வைப்பதன் மூலம் பிரச்னையை எளிதில் கண்டறியலாம்.
மாதவிலக்கு தள்ளிப் போகும் குடும்ப பெண்கள் கருத்தரித்துள்ளதா என்பதை சோதிப்பதும் அவசியம். மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்னதாக உப்பின் அளவைக் குறைக்கலாம். காபியை ஒதுக்கி விடுவதன் மூலம் கோபம் மற்றும் மார்பக வீக்கம், வலியை குறைக்கலாம். இந்த சமயத்தில் கல்சியம் அதிகம் உள்ள பால் இரண்டு வேளை அருந்தலாம். மன அழுத்தம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது அவசியம்
ரெசிபி
அவல் சாலட்: அவல் 100 கிராம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 50 கிராம் நுங்கை பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் துருவிய கேரட், அவல், நுங்கு சேர்த்து மிக்ஸ் செய்யவும். இத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். ஹீமோ குளோபின் அதிகரிக்கும். ரத்த சோகை மறையும்.
கீரை பிரைடு ரைஸ்: முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும், பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும். வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
பேபிகார்ன் பிரை: 200 கிராம் அளவு வேகவைத்த பேபிகார்ன், மைதா 50 கிராம், கடலை மாவு 50 கிராம் மூன்றையும் கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், பொரித்த பேபிகார்ன், தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.
டயட்
பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன சாப்பிடலாம் என்று ஆலோசனை தருகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குண்டாக இருப்பது, தொடரும் ரத்த சோகை, அடுத்தடுத்து பிரசவம், சத்தில்லா உணவு உட்கொள்வது என பல காரணங்களால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் தொல்லைகள் ஏற்படுகிறது. ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்களால் முறையற்ற மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, சோர்வு ஏற்படும். இதுபோல் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை குறைந்த குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. சிறு வயது முதல் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, புரதம் மற்றும் இரும்புச் சத்து, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, ராகி, முளைகட்டிய பயறு வகைகள், முழு கோதுமை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, ஆட்டு ஈரல், மீன், முட்டை ஆகிவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பேரீச்சை, மாதுளை, கொள்ளு, அவல், பெரிய நெல்லி, பனை வெல்லம் ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்தால், மாதவிலக்கு பிரச்னையை ஓரளவு தடுக்க முடியும்.
பாட்டி வைத்தியம்
* ஈச்சுர மூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு தீரும்.
* எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
* கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
* கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
* கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
* கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
* கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
* கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
* கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.
கர்ப்ப கால குமட்டலை தடுக்க
கர்ப்பகால குமட்டல் என்பது பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படுகிறது. முதல் முறையாக கர்ப்பிணியாகிறவர்களுக்கு குமட்டல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. இந்த குமட்டல் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. அதனால் குமட்டலை எப்படி தவிர்ப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
எவை எல்லாம் குமட்டலை ஏற்படுத்தும்?
குமட்டலை ஏற்படுத்தும் பொருட்கள் கர்ப்பிணிக்கு கர்ப்பிணி மாறுபடும்தன்மை கொண்டது. சிலருக்குபலாப்பழம் குமட்டலை ஏற்படுத்தும். மல்லிகைப் பூ மணத்தாலும் சிலர் அந்த அவஸ்தையை அனுபவிப்பார்கள். உடலிலோ, அறைகளிலோ பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், பொரித்த-வறுத்த உணவுகள், இனிப்பான பண்டங்கள் ஆகியவைகளும் குமட்டல் ஏற்படச் செய்யலாம்.
குமட்டலை தடுக்க சில வழிமுறைகள்:
* படுக்கையில் இருந்து அவசரப்படாமல், அதிராமல், ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்து கொண்ட பிறகு எழுந்திருக்கவேண்டும்.
* குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாறு போன்ற எந்த பானமாக இருந்தாலும் வாயில் வைத்து சிறிது சிறிதாக உறிஞ்சி குடியுங்கள். வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் குமட்டல் உணர்வு இல்லாததுபோல் சிலருக்கு தோன்றும். அவர்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
* சமையல் வாசனை காரணமாக குமட்டல் ஏற்பட்டால், கைவசம் எப்போதும் தயாராக எலுமிச்சை அல்லது ஆரஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவற்றை முகர்ந்து கொண்டே இருந்தால் குமட்டல் வருவதை தவிர்க்கலாம். இஞ்சி அல்லது கிராம்பை மென்று கொண்டு இருந்தாலும் குமட்டலை தடுக்க முடியும்.
* பாலுக்கு பதில் காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம்.
* காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறில் கொத்துமல்லியை கிள்ளி போட்டு குடித்தால் குமட்டல் வராமல் தவிர்க்கலாம்.
முகத்திலுள்ள ரோமங்களை நீக்க எளிதானக் குறிப்புக்கள்
* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
முகத்தில் பல பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு பயனுள்ளக் குறிப்புக்கள்
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ”வாட்டர் பேஸ்டு மேக்கப்” போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக அடங்காப் பிடாரியாக உள்ளதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?
ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
உங்கள் சருமத்தில் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரிஸ. முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சரி செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷ’யலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் ”ஈ” ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
உங்களது சருமம் மென்மையாக மாற வேண்டுமா ?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ”நற நற”வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
”ட்ரை ஸ்கின்” உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத ”வெஜிடபிள் ஃபேஸ்பேக்” இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.