Home சூடான செய்திகள் நல்ல வாழ்க்கைத்துணைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?…

நல்ல வாழ்க்கைத்துணைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?…

33

பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர்.

நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல. ஆனால் அது மட்டுமே போதும் என்று நினைப்பதுதான் தவறு.

எனவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையைத் தேடக்கூடாது.

சிறந்த வாழ்க்கைத் துணையென்றால் அவரிடம் என்ன மாதிரியான குணங்கள் இருக்க வேண்டும்?…

நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏனெனில் சிலர் தன் வாழ்க்கைத் துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும். அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும், சின்ன வேலையாக இருந்தாலும் கொடுத்ததை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பவராக இருக்க வேண்டுமேயொழிய, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்.

உங்களுடைய வளர்ச்சியை நன்றாகப் புரிந்து கொள்பவர் யாரோ அவர்தான் சிறந்த வாழ்க்கைத் துணையாகவும் இருக்க முடியும். புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட இருப்பது தான் மிக முக்கியம். மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக நினைக்கும் மனோபாவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

நேரம், காலம் பார்க்காமல் எப்போது தோன்றுகிறதோ அந்த சமயங்களில் கூச்சமில்லாமல் தன்னுடைய காதலை தெரிவிப்பவராக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல வாழ்க்கைத்துணை தான் செய்யும் தவறை ஒத்துக்கொள்பவராக இருப்பார்கள். ஆனால் பலரோ தான் செய்யும் தவறுக்கு தன்னுடைய துணை காரணம் என மாற்றிவிடுவார்கள். இது மிகவும் தவறான விஷயம்.