Home ஆண்கள் Tamil Sex X Care ஒருவருக்கு ஆண்குறி வளைந்து காணப்படுவது ஏன்? இதன் அபாயங்கள் என்ன?

Tamil Sex X Care ஒருவருக்கு ஆண்குறி வளைந்து காணப்படுவது ஏன்? இதன் அபாயங்கள் என்ன?

69

சிலருக்கு சிறிதளவு ஆண்குறி வளைந்தது போல காணப்படும். ஆனால், சிலருக்கு ஆண்குறி மிகவும் வளைந்து காணப்படும்.

இது இயற்கையா? அல்லது ஏதுனும் உடல்நலக் கோளாறின் அறிகுறியா?

இப்படி ஆண்குறி வளைந்து காணப்படுவது எதனால்? இதன் ஆரோக்கிய விளைவுகள் என்னென்ன என்று இங்கு காணலாம்…

பெய்ரோனி நோய்!
பெய்ரோனி எனப்படுவது டியூனிக்கா அல்பஜீனியா எனப்படும் நோய் ஆகும். இதை மீள்தன்மை உடையது. இதை நாம் சரிசெய்ய முடியும். இது இணைப்பு திசு சவ்வுக்குள் வடு திசு எனப்படும் பிளேக் உருவாக செய்து பெய்ரோனி நோய் உண்டாக செய்கிறது.

பிளேக்!
பிளேக் எனப்படுவது ஆண்குறி மேல் பகுதி அலல்து கீழ் பகுதியில் உருவாகும். பிளேக் உருவாவது தொடர்கையில், ஆண்குறி வளையும் நிலை அடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படும் போது வலி ஏற்படலாம்.

வலி!
விறைப்பு மட்டுமின்றி, உடலுறவில் ஈடுபடும் போதும் வலி அதிகமாகும். இதனால் உடலுறவில் ஈடுபட முடியாது.பெய்ரோனி என்பது முதலில் அழற்சி போல தான் உருவாகும். பல நிலைகள் கடந்தே அது முன்னேறி பெய்ரோனி நோயாக மாறுகிறது. இது பெரும்பாலும் 40 – 70 வயதுக்குட்பட்ட ஆண்களை தான் பாதிக்கிறது.

காரணிகள்!
இந்த பெய்ரோனி நோய் உண்டாவதற்கு தெளிவாக இது தான் காரணம் என கண்டறியப்படவில்லை எனிலும், இந்த ஒருசில காரணங்கள் பெய்ரோனி நோய் உண்டாக கருவிகளாக இருக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்குறி அடிபடுதல் ஆண்குறியில் ஊசி போடுவது ஆட்டோ இம்யூனி நோய்கள்

அபாயங்கள்!
பெய்ரோனி நோயால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்கள். ஆண்குறியில் நுண்ணிய காயங்கள் பாலியல் செயலில் ஈடுபட தடை ஆட்டோ இம்யூனி நோய்கள் / கோளாறுகள்.

அறிகுறிகள்!
ஒருசில அறிகுறிகளை வைத்து இந்த பெய்ரோனி நோயை கண்டறியலாம்… ஆண்குறியில் கட்டி. உடலுறவு / விறைப்பு ஏற்படும் போது வலி. ஆண்குறி வளைந்து காணப்படுவது. ஆண்குறி சிறிதாவது விறைப்பில் பிரச்சனை.

சோதனைகள்!
பெய்ரோனி நோயை சில பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதற்கான சோதனைகள் என கூறப்படுபவை… ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை ஆண்குறி எக்ஸ்ரே

சிகிச்சை!
கிராஃபிடிங் – இந்த முறையில் பிளேக் அகற்றப்படும். புதிய தோல் சிட்டு துண்டு இரத்த குழாய் வேறு விலங்கிலிருந்து பெறப்பட்டு சேர்க்கப்படும். ப்ளைகேஷன் – பிளேக் எதிராக சிறு திசு துண்டு கில்லி எடுப்பார்கள். இதனால் ஆண்குறி வலிமையாகும். மருத்துவர் குறிப்பு! இதை எப்படி தடுப்பது என இதுநாள் வரை எந்த ஆய்வாளரும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், இதனால் விறைப்பு, உடலுறவு கோளாறுகள் ஏற்படுவதால் மன அழுத்தம் உண்டாகவும் வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.