Home அழகு குறிப்பு கூந்தல் அழகு எக்கச்சக்கமா முடி கொட்டுதா?… முட்டைய இப்படி தேய்ங்க…

எக்கச்சக்கமா முடி கொட்டுதா?… முட்டைய இப்படி தேய்ங்க…

46

முடி உதிர்தலும் பொடுகுத் தொல்லையும் இல்லாத ஆட்களு இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மனஅழுத்தம், தூசி, மாசுக்கள், போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை ஆகிய பல காரணங்கள் உண்டு.

இவை எல்லாவற்றையும் நிறைவு செய்வது என்பது நம்மால் முடியாத காரியம் தான். இருந்தாலும் நம்மால் முடிந்த, நம்முடைய வீட்டில் உள்ள சில பொருள்களைக் கொண்டு எவ்வாறு தலைமுடி உதிராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

தலைமுடி பிரச்னையைத் தீர்ப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பொருள்களில் மிக முக்கியமானவை முட்டையும் எலுமிச்சையும்.

அவற்றை வைத்து எப்படி முடி உதிர்தல் பிரச்னைக்குத் தீர்வு காண்பது என்பதைப் பற்றிக் காண்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை -1

எலுமிச்சை -1

செய்முறை

முட்டையை மஞ்சள் கருவோடு சேர்த்து உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவுங்கள்.

பின்பு 15 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து, மென்மையான ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள்.

வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தல் பிரச்னை சுத்தமாக மறைந்துவிடும்.

பொடுகுத்தொல்லையும் நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும்.