ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சண்டைகள் கண்டிப்பாக இருக்கும். அதே போல ஒவ்வொருவரும் தவறும் செய்வதும் உண்டு. அவ்வாறு சண்டைகள், தவறுகள் என்பது இருக்கும் போது, அதை நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது.
மேலும் ஏதேனும் தவறு செய்தாலோ அந்த நேரத்தில் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஈகோ உங்கள் காதல் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். இத்தகைய மன்னிப்பு என்னும் ‘ஸாரி’ என்ற வார்த்தையை எந்தெந்த நேரத்தில் மறக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
1. சினிமாவுக்கு போகலாம் என்று மனையிடம் கூறிவிட்டு லேட்டாக வரும் போது கோபமாக இருக்கும் உங்கள் துணையிடம் முதலில் ‘ஸாரி’ என்று மறக்காமல் கூறி, பிறகு அவர்களது கோபத்தை முற்றிலும் போக்க, அவர்களிடம் அடுத்த ஷோவிற்கான டிக்கெட் கிடைத்தால் கண்டிப்பாக போகலாம் என்று சொல்லி டிக்கெட் வாங்கிவிட்டால், நீங்கள் செய்த தவறு அவர்கள் மனதில் இருக்காமல் மறைந்துவிடும்.
2. வெளியே செல்ல மனைவி அழைக்கும் போது, நண்பர்களது வேண்டுகோளுக்கிணங்க மனைவியிடம் வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி, நண்பர்களுடன் வெளியே சென்று ‘கிரிக்கெட் மேட்ச்’ விளையாட சென்று இருப்பீர்கள். இந்த விஷயம் மனைவிக்கு வேறு வழியில் தெரிந்தால், பிறகு நீங்கள் அவ்வளவு தான். ஆகவே வீட்டிற்கு வந்ததும் அவர்கள் நல்ல மனநிலையில், மகிழ்ச்சியாக இருக்கும் போது நடந்ததை சொல்லி, அந்த நேரத்தில் ‘ஸாரி’ கேட்க வேண்டும்.
3. மனைவி வீட்டில் ஆசையாக, சுவையாக சமைத்து வைத்திருக்க, கணவன் நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும் போது வீட்டில் சண்டை வெடிக்கும். ஆகவே அந்த சமயத்தில் மறக்காமல் அவரிடம் செய்த தவறை உணர்ந்து ‘ஸாரி’ என்று கேட்டு, பிறகு அவர்களிடம் பசிக்கிறது என்று கூறி அவர்கள் சமைத்த உணவை, அவர்கள் முன்னே வயிறு வெடிக்கும் அளவு உண்பது போல் சிறு நாடகம் நடித்து பாருங்கள், அவர்கள் கண்டிப்பாக சமாதானமாவார்கள்.
4. ஊரில் இருந்து மனைவி வரும் போது, அவர்களை அழைத்து வருவதை மறந்துவிட்டு நேரம் போவது தெரியாமல், ஆபிஸில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள். பிறகு நேரத்தை பார்க்கும் போது தான் அவர்கள் காத்துக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வரும் . ஆனால் மனைவி வீட்டிற்கு எப்படியாவது சென்றிருப்பாள் என்பது தெரியும்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு சென்று வெறும் ‘ஸாரி’ மட்டும் கேட்டால் கோபம் போகாது, ஐஸ் வைக்க அவர்களுக்கு ஒரு மலர் கொத்து அல்லது அவருக்கு பிடித்ததை வாங்கிக் கொண்டு, அதோடு ‘ஸாரி’ சொல்லுங்கள். சற்று நேரம் கோபம் இருக்கும், ஆனால் நீங்கள் கொஞ்சம் பேசி புரிய வைத்தால் போய்விடும்.
– ஆகவே இந்த நேரங்களில் எல்லாம் மறக்காமல் ‘ஸாரி’ சொல்லினால், வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.