இரவு வேளையில் உணவு சாப்பிடும் நேரமானது, பெற்றோர்களுடன் குழந்தைகள் செலவழிக்க மிகச் சிறந்த நேரமாகும். அந்த நேரத்தில் தான் எப்போதையும் விட குழந்தைகளை அதிகமாகப் புரிந்து கொள்ள முடியும்.
குழந்தைகள் இரவு உணவு சாப்பிடும் நேரத்தில், இன்றைக்கு நீ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எந்த விஷயத்துக்கா? என்று கேட்க வேண்டும். இதனால் அவர்களை மகிழ்ச்சியாக அல்லது கடினமாக நினைக்கும் விஷயங்களை நம்மால் புரிந்துக் கொள்ள உதவும்.
மதிய உணவு இன்று யாருடன் அமர்ந்து சாப்பிட்டாய்? என்று குழந்தைகளிடன் கேட்க வேண்டும். இதனால் குழந்தைகள் எப்போதும் யாருடன் அதிகமாக பழகுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
நீ இன்று செய்த மிகச்சிறந்த விஷயம் என்ன? என்று குழந்தைகளிடன் கேட்க வேண்டும். இதனால் குழந்தைகளின் திறமைகளை எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும்.
உன்னை மிக அதிகமாக சிரிக்க வைத்த விஷயம் எது? என்று குழந்தைகளிடம் கேட்க வேண்டும். இதனால் குழந்தைகள் எந்த விஷயத்தில் அதிக ஆர்வம் செலுத்தினார்கள் என்பதை உணர முடியும்.
டி.வியில் ஒளிபரப்பாகும் செய்திகள் தொடர்பாக உனக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்று கேட்டு தெரிந்துக் கொண்டால், அவர்களின் மனதில் தேடும் பதில்களுக்கு நீங்களே விளக்கத்தை அளிக்கலாம்.
நாளை நீ என்ன செய்ய விரும்புகிறாய்? என்ற கேள்வியை குழந்தைகளிடன் கேட்டால், அவர்கள் கூறும் பதிலை வைத்து, அவர்களின் குறிக்கோள்கள் எவ்வளவு ஆழமானது என்பதை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவலாம்.