சாப்பிட உணவகத்துக்கு போகும் போது கூட நமக்கு பிடித்த உணவு இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்புடன் போகும் மனிதர்கள் ஏராளம். வாழ்க்கையிலும் பல விடயங்களில் பல எதிர்ப்பார்ப்பு எல்லாருக்கும் உள்ளது.
குறிப்பாக தனக்கு வரப்போகும் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும், அவர் குணாதிசயம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்புடன் பெண்கள் இருப்பார்கள்.
நகைச்சுவை உணர்வு (Humor Sense) உள்ள ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கும். சாதாரணமாக பேசும் விடயத்தை கூட நகைச்சுவை கலந்து பேசினால் பெண்களை எளிதில் கவரலாம்.
ஒரு காபியோ, பிரியாணியோ எதை மனைவி சமைத்து தந்தாலும் அதை கணவன் புன்னகையுடன் பாரட்ட வேண்டும். இது நம்மை நம் கணவர் பாராட்டுகிறாரே என்ற மகிழ்ச்சியை பெண்ணுக்கு தரும்.
மனைவி எது செய்தாலும் அதில் கணவன் தப்பு கண்டுபிடிக்க கூடாது, பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எப்போதும் ஆண் மதிப்பளிக்க வேண்டும்.
மனைவிக்கு ஏதேனும் விடயத்தில் தோல்வி ஏற்பட்டால் அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி பேச வேண்டும்.
பெண்கள் மென்மையையே எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் ஆண்கள் தன் கம்பீரம், திமிறு போன்ற விடயத்தை வெளிக்காட்ட கூடாது.
எதற்கெடுத்தாலும் பெண்களை சந்தேகப்படும் ஆண்களை அவர்களுக்கு பிடிக்காது. மனைவியை கணவன் முழுதாக நம்ப வேண்டும்.
மனைவிக்கு சர்ப்ரைஸ் ஆக பரிசு பொருட்கள் வாங்கி தரலாம். இது அவர்களை அதிகம் ஈர்க்கும்.