Home ஆண்கள் என் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சினை

என் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சினை

36

images-11திருப்தியான பாலுறவுக்கு தேவையான அளவில் ஆண்குறியின் விறைப்பு ஏற்படுவதிலும் அதைத் தக்க வைப்பதிலும் ஏற்படும் குறைபாடே இதுவாகும். குறித்த நபரிலும் அவரது துணையிலும் பாலியல் விளைவை ஏற்படுத்தும். இது மிகவும் பொதுவாக ஆண்களில் ஏற்படும் குறைப்பாடாகும்.

இதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவான காரணங்களாக நீரிழிவு, உயர் குருதியமுக்கும், நீண்டகால நோய்களான நீண்டகால சிறுநீரக செயலிழப்பு, நரம்புப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற மன நோய்களைக் குறியிடலாம். சில வேளைகளில் உள்ளம்சார் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாகலாம். மருந்துகளுள் மன அழுத்தத்திற்கான சில மருந்துகள், தூக்க மாத்திரைகள், சில ……… எதிர்ப்பு மருந்துகள் (ketoconazole போன்றவை) போன்றவற்றை காரணங்களாகக் குறிப்பிடலாம். விபத்துகள் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் முன்னிற்கும் சுரப்பியில் ஏற்படும் புற்று நோய்களும் காரணமாகலாம். இதைத் தவிர அதிகரித்த உடல் எடை, புகைத்தல், அதிகரித்த கொலஸ்ரோல், உயர் குருதியமுக்கம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி ஆகியவற்றை ஆபத்துக் காரணிகளாகக் குறிப்பிடலாம்.

உங்களுக்கு அண்குறி விறைப்புச் செயலிழப்பு ஏற்பட்டால் உங்கள் குடும்ப வைத்தியரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. விறைப்பு செயலிழப்புக்கு காரணங்களான நீரிழிவு, நரம்பு பிரச்சினை, உயர் குருதியமுக்கம் என்பன சோதிக்கப்பட்டு, அவற்றுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். புகைத்தல் இருப்பின் அதைக் கைவிட வேண்டும். அதிகரித்த உடல் எடையுள்ள ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு நிறையைக் குறைக்க வேண்டும்.

“வயக்ரா” என பொதுவாக அழைக்கப்படும் “சிப்டனெபில்” எனப்படும் மருந்தானது இதற்கான வெற்றிகரப் பொருளாக பாவிக்கப்படும் இது தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரால் நிர்ணயித்து எழுதிக் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் வோர்பரின் (warfarin) அல்லது நைத்திரேற்றுகள் (nitrates) உள்ளெடுப்பவராக இருந்தால் இதைப் பாவிக்க முடியாது. ஆண் குறிக்கு குருதியோட்டத்தை கூட்டுவதற்கான வெற்றிட சிகிச்சை (vacuum therapy), ஆண்குறிக்கான ஊசி மருந்து ஏற்றல் மற்றும் சத்திர சிகிச்சை ஆகியவும் காணப்படுகின்றன.