Home அந்தரங்கம் உறவுக்கு முந்தைய முன்தொடுதல் விளையாட்டை மிகவும் விரும்புகிறார்கள்

உறவுக்கு முந்தைய முன்தொடுதல் விளையாட்டை மிகவும் விரும்புகிறார்கள்

31

maxresdefault-6உடலுறவு என்பது தாம்பத்யத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு நல்ல வாய்ப்பு.
உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான உறவாகாது.
உறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான தொடுதல், முத்தமிடுதல் இருந்தால்தான் கணவனுக்கும் மனைவிக்கும் மணவாழ்க்கை முழுமை பெறும்.
மென்மையான ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் உணர்ச்சி நரம்புகளால் பின்னப்பட்டுள்ளது. உடலின் சில பகுதிகளில் உணர்ச்சியை தூண்டும் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும்.
நிறைய பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதல் விளையாட்டை மிகவும் விரும்புகிறார்கள்.

சில முன் விளையாட்டுகள்:

முகம் பார்த்து பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் உங்களின் முன்தொடுதல் விளையாட்டு முறை சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.
அன்பு, அக்கறை, கவனிப்பு, “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் செய்கையால் உணர்த்தும் பரிவான மென்தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஏற்றிவிட முடியும். முன் தொடுதல் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெண்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
பாலியல் எண்ணமில்லாமல் ஆதரவாக பரிவுடன் செய்யப்படும் தொடுதல், அணைத்தல், தழுவுதல், மென்முத்தம் போன்றவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.
மிருதுவாக மென்மையாக தொடுதல், அணைத்தல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை.
பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல், கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் சிலருக்கு காம உணர்வை அதிகரிக்கும். இவற்றை ஆண்கள் தங்களின் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்யலாம்.
முத்தமிடுவதுதான் பாச உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுவதன் மூலம் பெண்ணின் ஆசையை அதிகரிக்கச் செய்யலாம்.
ஆண்கள் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித விதமாக முன்தொடுதல் முறையை மாற்றி செய்தால் தாம்பத்யத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணவரும் முன் தொடுதலை ஆரம்பித்தால் மகிழ்ச்சி அடைவார்.

உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள்.
மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறதாம்.
மகிழ்ச்சிகரமான உடலுறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது.
உடலுறவு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
உடலுறவு கொள்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு கூட குறைவுதான் என்று மருத்துவ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உடலுறவு மூலம் உடலில் ஏற்படும் சிறு சிறு பலவீனங்களும் குறைகின்றனவாம். ஜலதோசம், உடல்வலி, போன்றவைகூட எளிதில் குணமடைகிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது.
தாம்பத்ய உறவு எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை ஏற்படுகிறதாம்.
தினசரி தாம்பத்ய உறவு கொள்வது உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.
உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது. எனவே துணையின் சம்மதத்தோடு கூடிய தேவையான அளவு உடலுறவு உடலுக்கு நன்மையே,
அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.