Home உறவு-காதல் உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனை

உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனை

22

உறவு-350x250குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள்

ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய ஒரு வார்த்தை கோபம். இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சனைகளிலும் பங்கு வகிக்கிறது.

எந்த விஷயங்களையும், பிரச்சனைகளையும் நாசூக்காகக் கையாள கற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தில் பிரச்சனை வரும் என்று நினைக்கிறீர்களே அதை விட்டுக்கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

முதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சனைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.

எந்த ஒரு பிரச்சனை அல்லது விவாதத்தில் போதும் நீங்கள் சொல்வது தவறு என்று தெரிந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.

காதில் கேட்கும் எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். உறவுகளை நம்புங்கள் . உங்களை பற்றி அடுத்தவர்கள் தவறு கூறினால் அதை திருத்தி கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபப்படாதீர்கள்.

எந்த பிரச்சனை வந்தாலும் சிரித்த முகத்துடன் புன்புறுவல் காட்டினால் பிரச்சினை சுமூகமாக முடியும்..முடிந்தவரை உறவுகளிடம் எப்போதும் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பழகுங்கள்.

மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். மற்றவர்களை விட நீங்கள் தான் அறிவாளி என்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள். தயவு செய்து மற்றவர்களை மட்டம் தட்டி பேசாதீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லியும், அங்கே கேட்டதை இங்கே சொல்லியும் உறவுகளுக்குள் பிரிவை ஏற்படுத்தாதீர்கள். உறவுகளுக்கு மதிப்பளியுங்கள்.