பெரும்பாலோனோர் பற்களையும், உதடுகளையும் கவனிப்பதில் அக்கறை செலுத்துவதே கிடையாது. அதற்கு போய் தேவையில்லாமல், நேரத்தை செலவழிப்பதா என்று நினைகிறார்கள். அதற்கு நான் சில எளிய வழிமுறைகளை கற்று தருகிறேன் அதை பின்பற்றுங்கள்.
உதட்டை பாதுகாப்பதற்கான எளியமுறை :
நேரத்தை வீணடிக்காமல் நாம் அன்றாடம் செய்யும் வேலைகளின் தொடர்பிலே நம்முடைய அழகை காக்க முடியும்.
முதலில், காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன், அந்த ப்ரஸால், உதடுகளின் மேல் தேய்த்தால், இறந்த செல்கள் மீண்டும் உயிர் பெற்று உதடு வலுவலுப்பாக அமையும்.
சாதாரண வெள்ளை துணியால் உதட்டின் மேல் தேய்த்தால், உதட்டில் இருந்து வெள்ளை நிறத்தில் தோல் பிரிந்து வரும். பின்பு, தண்ணீரை தொட்டு அலம்பவும்.
முகத்திற்கு உபயோகிக்கும் “ஸ்க்ரப்”பை உதட்டின் மேல் தேய்த்து, பின் வழக்கம் போல் லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் பயன்படுத்தினால், உதடு அழகாக தெரியும்.
பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால்பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும் தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படையவைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.
பற்களின் பராமரிப்பு:
உதட்டை மட்டும் பராமரித்தால் போதாது. உதட்டுடன் சேர்த்து பற்களையும் பராமரித்தால் பார்ப்பதற்கும், சிரிப்பதற்கும் அழகாய் தெரியும். நாம் சிரிப்பது வசீகரமாக தெரிய பற்களின் அழகு மிகவும் அவசியம்.
தினமும் பல் துலக்குவதோடு, Floss செய்ய வேண்டும்.
பற்களை வருடத்திற்கு ஒரு முறையாவது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும்பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில்அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்திவிடுவது அவசியம்.
இதனால்இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடுகால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களைஇடைவெளியிலிருந்து காப்பாற்றும்.
வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்றுஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொருஉணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்றுஇருக்கும்.
பேசும் போது, வாய் துர்நாற்றத்தை தடுக்க, கொய்யா இலை, மற்றும் புதினா போன்றவற்றையும் பொடியாக அரைத்து விளக்கினால், பல் துற்நாற்றம் ஏற்படாது.
டூத் ப்ரஷை 3 மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும்.
இவ்வாறு பற்களையும், உதடுகளையும் பாதுகாத்தாலே, நம் அழகு மேம்படும். நாம் பிறரிடம் தயங்கி, தயங்கி பேச தேவையில்லை. மேற்சொன்ன “டிப்ஸ்களை” பயன்படுத்தி, இன்பமாய் இருங்கள்.