Home பெண்கள் அழகு குறிப்பு உடல் அழகு – முகம் பளபளப்பாக இருக்க

உடல் அழகு – முகம் பளபளப்பாக இருக்க

16

சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

முக அழகு
*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..
*தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.