Home பாலியல் உடலுறவு பிரச்சனைகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

உடலுறவு பிரச்சனைகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

29

beautiful-facebook-bhabhidesi.com-collection-13-644x320-300x149பால்வினை நோய், தகாத உடலுறவின் காரணமாக ஏற்படுகிறது என்று தான் நம்மில் 99% மக்கள் தெரிந்திருக்கிறோம். ஆனால், உடலுறவு காரணம் இன்றியும் கூட பால்வினை நோய் தாக்கம் ஏற்படலாம். ஆம், பொதுவாக இரத்தத்தின் காரணமாக என்று கூறப்படுகிறது.
ஆனால், சரும தொற்றின் காரணமாக கூட பால்வினை நோய் பரவலாம் என்று கூறப்படுகிறது. சிலர் பால்வினை நோய்க்கு தீர்வே இல்லை என எண்ணுகிறார்கள். சில பால்வினை நோய்களை முதல் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
சில பால்வினை நோய்களுக்கு முழுமையான தீர்வு கிடையாது. இதற்கு வாழ்நாள் முழுக்க மருந்து மற்றும் சிகிச்சையின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும். எனவே, பால்வினை நோய் குறித்த சந்தேகங்களை போக்கிக்கொள்ள அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கேள்வி, பதில்கள் பற்றி இனி பார்க்கலாம்….
பால்வினை நோய் குணப்படுத்தக் கூடியதா?
அந்தந்த பால்வினை நோயை பொறுத்து இருக்கிறது. சரியான நேரத்தில், முன்கூட்டியே மருத்துவரை அணுகுவதால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். ஹெர்ப்ஸ் போன்ற பால்வினை நோய்களை கட்டுப்படுத்த தான் முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்த முடியாது.
ஆணுறை பால்வினை நோயை தடுக்குமா?
பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் கருவி தான் ஆணுறை. ஆனால், 95% தான் இதை நம்ப முடியும். ஆணுறையில் கிழிசல்கள் ஏற்படும் போது தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
அறிகுறிகள் இல்லை எனில், பால்வினை நோய் ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா?
தவறு, சில பால்வினை நோய்கள் முன்கூட்டியே அறிகுறிகளை உடலில் வெளிக்காட்டது. தாக்கம் அதிகமான பிறகு சில அறிகுறிகள் வெளிவரும், சில பால்வினை நோய்களுக்கு அறிகுறியே தென்படாது என்றும் கூறப்படுகிறது.
மீண்டும் மீண்டும் பால்வினை நோய் தாக்கம் ஏற்படுமா?
பாதுகாப்பாக உடலுறவுக் கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் எச்சரிக்கப் படுகிறார்கள். ஒரு தடவைக்கு மேலாக பால்வினை நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பான முறையை கடைப்பிடிக்க வேண்டியது தான் அவசியம்.
சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகும் பால்வினை நோய் தாக்கம்?
பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டால் , முழுமையாக குணமடையும் வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சில பால்வினை நோய் தாக்கத்திற்கு தம்பதியர் இருவரும் ஒன்றாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது ஒருவேளை, உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தால், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
தொற்று ஏற்படாமல் காப்பது எப்படி?
பாதுகாப்பற்ற உடலுறவுக் கொள்ளும் துணையுடன் உடலுறவில் ஈடுபடாது இருக்க வேண்டும். உங்கள் துணை பாதுகாப்பாக தான் உடலுறவுக் கொள்கிறாரா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். தம்பதி இருவரும் பாதுகாப்பாக உடலுறவுக் கொண்டாலே பால்வினை நோய் தாக்கம் ஏற்படாது.
முத்தமிடுவதன் மூலமாக பால்வினை நோய் பரவுமா?
மிக மிக குறைவான வாய்ப்புகள் தான் இருக்கின்றன. பெரும்பாலும் இவ்வாறு நடக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால், புண் இருக்கும் சமயத்தில் இது பரவ வாய்ப்புகள் இருக்கின்றன.
கன்னி கழியாமல் இருப்பவர்களுக்கு பால்வினை நோய் ஏற்படுமா?
உடலுறவுக் கொள்வதால் மட்டுமே பால்வினை நோய் ஏற்படுவது இல்லை. சரும தொற்றின் மூலமாக கூட இது பரவலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.