Home பாலியல் உடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்!

உடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்!

28

04-1454574711-1surprisingfactsabouthumanintercourseசிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர்.
இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம். திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள்.
இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகல்வல்கள்…
நறுமணம்
மொநெல் இரசாயனத் சென்சஸ் மையம் நடத்திய ஓர் ஆய்வில், தங்கள் எதிர் பாலினத்தை எளிதாக ஈர்க்க நீங்கள் நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.
இஞ்சி
பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது
வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.
உணவு
உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
ஆணுறை
பொதுவாக ஆணுறைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பழமையானவை பயனளிக்காது. எனவே, ஆணுறை வாங்கும் போது அதன் உற்பத்தி தேதியை பார்க்க வேண்டியது அவசியம்.
விந்து வெளிப்படுதல்
அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். JAMA எனும் அமைப்பினர் நடத்திய ஆய்வில், அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டது.
வலி நிவாரணி
உடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-ஸ்பாட்
பொதுவாக ஜி-ஸ்போட் என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதை கண்டறிந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் என்பவர் இந்த பெயரை வைத்தார். இதுக் குறித்து இவர் இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதைகள்
ஆண்களுக்கு இரண்டு விதைகள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இரண்டும் ஒரே அளவில் இருக்காது என்பது பலரும் அறியாத தகவல். இடது விதை, வலது விதையை விட 10% சிறியதாக தான் இருக்கும்.
சுருங்குதல்
பதின் வயதினை கடக்கும் போது ஆண்கள் முதன் முறையாக இதை சந்தித்து இருப்பார்கள். அதுவரை ஆணுறுப்பு சுருங்கி, விரியும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. இது இயற்கையானது, இதை என்ன செய்தாலும் மாற்ற முடியாது என பல ஆய்வுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.