Home பாலியல் உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்

உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்

54

images (1)எந்த விதமான பாதுகாப்பு( கர்ப்பத்தடை) முறைகளும் பாவிக்காமல் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாக்குவதற்குரிய சந்தர்ப்பம் குறைந்த காலம் SAFE PERIOD எனப்படும். இந்தக் காலம் என்ற சொல் குறிப்பது பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரத்தில் இருக்கின்ற காலமாகும்.

ஒரு பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரமானது , எத்தனை நாட்களுக்கொருமுறை அவளின் மாதவிடாய் அடைகிறாள் என்பதாகும்.

அதாவது ஒரு தடவை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் அடுத்தமுறை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் இடையே உள்ள மொத்த நாடகளுமே அவளின் மாதவிடாய்க் காலமாகும்.

இன்னும் இலகுவாகச் சொல்வதானால் ஒரு பெண்ணின் இரண்டு மாதவிட்டய்களை எடுத்துக் கொண்டோமானால் அந்த இரண்டு மாதவிடாய்களும் தொடங்கிய முதல் நாட்களுக்கிடையே இருக்கும் காலம் அவளின் மாதவிடாய்க் காலமாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய இந்தக் காலப் பகுதியை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தக் காலப்பகுதி பெண்களுக்கு பெண்கள் வேறுபடலாம். பொதுவாக இந்தக் காலப்பகுதி 21 – 31நாட்களுக்கிடையே இருக்கும்.

இந்தக் காலப்பகுதியின் குறிப்பிட்ட நாட்களே ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு தயாரான நிலையில் இருப்பாள் , இதைத் தவிர்த்து மற்றைய நாட்களில் உடலுறவில் ஈடுபட்டாலும் அவளால் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

இந்தக் கர்ப்பம் தரிக்கக் குறைவான காலமே safe period எனப்படுகிறது. இதை எப்படிக் கணிக்கிறது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில் அந்தப் பெண் தனக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்களின் தினங்களை சில மாதங்களுக்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒவ்வொரு மாதவிடாய்க்களுக்கும் இடைப்பட்ட நாட்களை கணித்துக் கொள்ள வேண்டும். எல்லா மாதவிடாய்களுக்கும் இடையேயான காலம் நிச்சயமாக ஒரே அளவாக இருக்காது.

இந்த காலப்பகுதிகளின் ஆகவும் குறைந்த நாட்களைக் கொண்ட காலப் பகுதிகளில் உள்ள நாட்களில் இருந்து 18 நாட்களைக் கழித்து வைத்துக் கொள்ளுங்கள் .
உதாரணத்திற்கு அவளின் இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட குறைந்த இடைவெளி 26 நாட்கள் எனில் இந்த 26 யில் இருந்து 18 யை கழித்துக் கொள்ள வருவது 8.

அடுத்து அவளின் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட அதி கூடிய காலத்தில் இருந்து 10 நாட்களைக் கழித்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு அவளின் மாதவிடாய்களுக்கிடையே உள்ள அதி கூடிய காலம் 31 நாட்கள் என்றால் அதிலிருந்து 10 நாட்களைக் கழித்துக்கொள்ள வருவது 21.

இனி வரப்போகின்ற மாதவிடாய் தொடங்கும் நாளை முதல் நாளாகக் கொண்டால் அவளுக்கு அந்த முதல் நாளில் இருந்து 8 வது நாளுக்கும் 21வது நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கொண்ட நாடகளாகும். இது தவிர்ந்த மற்ற நாட்களில் எந்தப் பாதுகாப்பும் இன்றி உடலுறவு கொண்டாலும் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

இந்த 8 தொடக்கம் 21 நாட்களுக்கிடைப்பட்ட காலம் fertile period எனப்படும்.
அதாவது கர்ப்பம் தரித்தளுக்கு தயாரான காலம். மீதமிருக்கும் காலம் safe period எனப்படும்.

குழந்தை உருவாக தாமதமாகும் தம்பதியினர் இந்தக் காலப்பகுதியில் அதிகம் உறவில் ஈடு படும் போது அவர்களுக்கு குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகமாகும்.

குழந்தை வேண்டாம் அல்லது பிற்போட வேண்டும் என்று நினைக்கும் தம்பதியினர் இந்தக் காலப் பகுதியை தவிர்த்து மற்றைய காலப் பகுதிகளில் உறவில் ஈடுஇவ்வாறு உங்களுக்குரிய கர்ப்பம் கர்ப்பம் தரிக்கும் காலம் மற்றும் பாதுகாப்பான காலத்தை உங்கள் மாதவிடாய்க் காலப்பாதியை சரியான முறையில் குறித்து மேலே சொன்ன முறையில் கணித்துக் கொள்ளுங்கள் .
படலாம்.

பி .கு- இது மாதாமாதம் சரியாக மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.