Home பாலியல் உடலுறவில் விந்து வெளியேறவிட்டால்- தீர்வுகள்

உடலுறவில் விந்து வெளியேறவிட்டால்- தீர்வுகள்

25

images (2)இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தை விடுவது போன்றவையாக இருக்கும்.
இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், ஒரு Sex Therapist ஐ அணுகுங்கள். இவர், உங்களையும் உங்கள் மனைவியையும் சேர்ந்து வரச்சொல்லி, உங்கள் திருமண உறவு சுமுகமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனைவார்.
இந்தக் கட்டம் முடிந்த பின்னர், இரண்டு விதமான செயல் முறைகள் பரிந்துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.
செயல் முறை 1 :
1) ஆண் (நீங்கள் தான்) பெண்ணின் முன்னால் உட்கார்ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும். இந்த நிலையில் விந்து வெளியேற சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணுடைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3) மேலே சொன்ன இரண்டாவது கட்டமும் நன்கு பழகிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய்ச்சுவது பழகி, பிறகு பெண்ணுருப்புக்கு உள்ளே நுழைத்தும் விந்தைப் பாய்ச்சலாம்.

செயல்முறை 2:
இந்த செயல் முறை மாஸ்டர்ஸ்-ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, தடவுவது, ஆழமாக முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2) அடுத்து, பெண் ஆணை உட்கார வைத்து, அவன் ஆணுறுப்பை கையை வைத்து ஆட்ட வேண்டும். ஆண் உச்ச கட்டத்துக்கு அருகில் வரும்வரை இப்படி செய்ய வேண்டும்.
3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கியதும், பெண் அவன் மேல் உட்கார்ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமாறு செய்ய வேண்டும்.
விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடியாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வங்கி மூலம், அல்லது செயற்கை சினை சேர்த்தல் ( artificial insemination) மூலமாக குழந்தை பெறுவது தான் தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக்கடி மன நல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடு பட முயல வேண்டும்.