Home பாலியல் உடலுறவின் போது ஏற்படும் தலைவலி

உடலுறவின் போது ஏற்படும் தலைவலி

23

311731995ஒரு நண்பர் தன் மனைவிக்கு உடலுறவின் போது தலைவலி வருவதாகவும் அதற்கு என்ன காரணம் என்றும் ஒரு பின்னூட்டத்திலே கேட்டிருந்தார்.

உண்மையில் உடலுறவின் போது தலைவலி ஏற்படலாமா?
ஆம். சில பேருக்கு உடலுறவின் போது தலைவலி ஏற்படலாம். இது coital cephalgia எனப்படுகிறது. இது பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே அதிகம் ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இதற்குரிய சரியான காரணம் தெரியாவிட்டாலும், உடலுறவின் போது அதிகம் குருதி உடலுறவுக்குத் தேவையான உடலின் பாகங்களுக்குச் செல்வதால் மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறைவதால் இவ்வாறு தலைவலி ஏற்படலாம் என்று சொல்லப் படுகிறது.

சிலபேருக்கு இது ஆரம்ப காலத்தில் மட்டும் இருந்து பின்பு மறைந்து விடலாம். சிலரில் இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் இவ்வாறு தலைவலி வரும் போது நீங்கள் பரசிட்டமோல் போன்ற நோ நிவாரணிகளை பாவித்துப் பார்க்கலாம். ஆனால் தொடர்ந்து இது ஒரு பிரச்சினையாக இருக்குமானால் ஒரு வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் வெறுமனே இது உடலுறவின் பொது மட்டும் ஏற்படும் தலைவலியாக இல்லாமல்,வேறு காரணத்தால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.

குறிப்பாக தலையில்(மூளையில் ) ஏற்படுகிற கட்டிகளால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.

அதுதவிர தலைவலியோடு வாந்தி வருதல், வலிப்பு வருதால் அல்லது உடலுறவு தவிர்ந்த மற்றைய நேரங்களிலும் தலைவலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டியதுஅவசியமாகும்.