கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும் என நிறைய டிப்ஸ் அறிந்திருப்பார்கள். அதே போல தேவையற்று கருத்தரிப்பதை தடுக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என பலர் அறிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், உடலுறவில் ஈடுபட்ட பிறகு என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என பெரும்பாலும் யாரும் அறிந்து வைத்திருப்பது இல்லை. காரியம் முடிந்ததும் மற்றதை மறந்துவிடுவது மனித இயல்பாக மாறிவிட்டது.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு மிக முக்கியமாக இரண்டு தவறுகளை தம்பதிகள் செய்யக் கூடாது என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்…
சிறுநீர் கழிக்க வேண்டும்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
சரியா? தவறா?
உடலுறவில் ஈடுபட்டவுடன் உங்கள் துணையை பிரிந்து செல்ல வேண்டாம், இது அவர்களது இன்பத்தை குறைக்கும் செயல் சென்று சிலர்கூறுவார்கள். ஆனால், சிறுநீர் கழிக்க வேண்டும் என நிபுணர்கள் கூருகிறார்கள்.
அடக்க வேண்டாம்
உடனே சிறுநீர் கழிக்க போகாமல் இருப்பினும் கூட, சிறுநீர் வரும் போது அதை அடக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலுறவிற்கு பிறகு சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது உடல்நலனுக்கு தான் கேடு.
கொஞ்சுதல்
சிறுநீர் கழித்துவிட்டு கூட, மீண்டும் வந்து உங்கள் துணையை கொஞ்சலாம். ஆனால், சிறுநீரை அடக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.
சுகாதாரம்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், சுகாதாரத்தை மறந்துவிட வேண்டாம். உடலை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
சுகாதாரம்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், சுகாதாரத்தை மறந்துவிட வேண்டாம். உடலை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
தொற்று
இவற்றால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சில தொற்றுகளின் தாக்கம் ஏற்பட்டால் நீங்கள் சில காலத்திற்கு உடலுறவில் ஈடுபடுவதையே தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
உடனே வேண்டாம்
கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவில் ஈடுபட்டவுடனே பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டாம். இதனால் உட்செல்லும் விந்தணுவிற்கு தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கொஞ்ச நேரம் கழித்து சுத்தம் செய்வது நல்லது. ஆனால், சுத்தம் செய்ய மறந்துவிட வேண்டாம்.