Home பெண்கள் அழகு குறிப்பு உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?

உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?

97

185897688_XS-300x158இது உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. மெழுகுகளை பயன்படுத்துவதால், முடிகளை வேரிலிருந்தே நீக்கி விடுவதால், அவை மீண்டும் முளைத்து வளர நீண்ட நாட்களாகும். ஆனால், நீங்கள் தினமும் ஷேவிங் செய்தால் கூட, இரண்டு வாரங்களுக்குள் முடி அடர்த்தியாக வளர்ந்து விடுவதை தவிர்த்திட முடியாது.

அதே போல, நீங்கள் தினமும் ஷேவிங் செய்தால் தோலில் ஏற்படக் கூடிய எரிச்சலும் கூட, மெழுகு வேக்சிங் செய்யும் போது வராது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். மெழுகு பயன்படுத்திய இடங்களில் முடி திரும்ப வளருவதற்கு நீண்ட காலம் ஆகும். ஆனால், இடத்தில் ஷேவிங் செய்யும் போது முடி தொடர்ந்து அடர்த்தியாக வளரத் துவங்கும்.
மேலும், வேக்சிங் செய்யப்பட்ட இடத்தில் இதற்கு நேரெதிரான விளைவாக, முடிகள் மெலிதாக வளரும். வேக்சிங் என்று வந்தாலே வலி என்ற வார்த்தை நினைவுக்கு வரும். சூடான மெழுகை உங்களுடைய தோலின் மேல் போட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் முடிகளை பிய்த்து எடுப்பதுதான் வேக்சிங் வழிமுறையாகும்.

ஆனால், மெழுகின் அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும். இப்போது மாய்ஸ்சுரைஸர்களை கொண்ட மெழுகுகள் விற்கப்படுகின்றன. முடியை நீக்கத் தொடங்கும் முன்னதாக இதை தடவிக் கொண்டால், அந்த பகுதிகள் மென்மையாக விடுகின்றன.

எனவே, மாய்ஸ்சுரைஸர்களை மெழுகில் சேர்த்து தடவுவதன் மூலம் அந்த பகுதியிலுள்ள சருமம் மென்மையாகி விடுவதால், முடியை முழுமையாக வெளியே உருவி எடுத்து விட முடியும். இவ்வாறு முடிகளை நீக்கிய பின்னர், தோலில் செதில்கள் போல எதுவும் இருப்பதில்லை. உங்களுடைய தோல் மிகவும் சென்சிட்டிவ்வானது என்று நினைத்தால், ஷேவிங் செய்வதால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எனினும், வேக்சிங் முறையில் அலர்ஜிகள் வராமலிக்கக் கூடிய மெழுகுகளை வாங்கிப் பயன்படுத்திட முடியும். சோயா அல்லது சர்க்கரையை அடிப்படையாக கொண்ட மெழுகுகளை பயன்படுத்துவதன் மூலம் எரிச்சல் வராமல் தவிர்க்க முடியும்.

மெழுகு தடவப்பட்ட துணிகளை பயன்படுத்துவதன் மூலம், சரியான அளவிற்கு மட்டுமே மெழுகை தடவிக் கொள்வதால் எரிச்சலை குறைத்திடவும் முடியும். வேக்சிங் பயன்படுத்துங்கள், முழுமையான அழகைப் பெற்று பலனடையுங்கள்!