Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சியும் இடை தொடை அழகு

உடற்பயிற்சியும் இடை தொடை அழகு

29

உடல் நலத்திற்கு உட்கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமானதோ, அதேப்போல் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சரிவர சென்று அடைய வேண்டும். இதற்கு பெரிதும் உதவுவது நாம் செய்யும் உடற்பயிற்சி தான். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுவது, உடல் எடை குறைவது, இரத்த அழுத்தம் குறைவது, சர்க்கரை நோய் வராமல் தடுப்பது ஆகியவை நிகழும். ஆகவே, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டாலும், ஒருசில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால், ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம். பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. எனினும், பிரதானமான பகுதிகளான இடுப்பு, தொடை பகுதிகளில் கொழுப்புச்சத்து சேர்தல் அதிகமாக இருக்கின்றது. அதனால், முதலில் அப்பகுதிகளை சரிசெய்வது எப்படி என்று பார்க்கலாம். பெரிய இடை மற்றும் தொடை உள்ள பெண்கள் பெரிதும் யோசிப்பது உடல் எடையை குறைப்பது பற்றி தான்.

பெண்கள் தங்களை அழகாக்க என்ன தான் செய்யவில்லை. மசாஜில் இருந்து ஜெல், க்ரீம், பத்திய உணவு என்று சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். என்னதான் செய்தாலும், கொழுப்புச்சத்து குறைவதற்கு எதுவுமே சரிவருவது இல்லை. உண்மை என்னவென்றால், உடற்பயிற்சி மட்டுமே உடலின் கீழ் பகுதியை அழகுறச் செய்யும். பொதுவாக உடலை அழகுறச் செய்வதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றது. ஒன்று உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வது. மற்றொன்று யோகா பயிற்சியில் ஈடுபடுவது. உங்களது சுறுசுறுப்பான அட்டவணையில் வெளியில் செல்ல நேரம் இல்லாத போது, வீட்டிலேயே யோகாசனங்களை மேற்கொண்டால், தொடை மற்றும் இடை நன்கு சிக்கென்று இருக்கும்.

உட்கடாசனா

இந்த ஆசனம் செய்வதற்கு பரந்த இணங்குத்தன்மை தேவைப்படும். இந்த பயிற்சியின் தொடக்கத்தில் கால்களில் வலி ஏற்படக்கூடும். இருப்பினும், தொடர்ந்து செய்து வந்தால், இளக்கம் அடைந்து வலி நீங்கிவிடும். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போம்.

* பாதங்களை இணைந்து வைத்து கொண்டு நிற்கவும்.

* மூச்சை உள்ளிழுக்கும் போது கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். மேலும், மூச்சை வெளியேற்றும் போது, முட்டிகளை மடக்கி, நாற்காலியில் உட்காரும் நிலையில் இருக்கவும்.

* 30-60 நொடிகள் இதே நிலையில் இருக்கவும். பின்னர், பழைய படி நிற்கும் நிலைக்கு வரவும்.

* தொடக்க நிலையில் இருப்பவர்கள் 10 முறை செய்யலாம். பழகப் பழக அதனை அதிகரிக்கலாம்.

நாற்காலி நிலை நமக்கு பெரிது உதவியாக இருக்கும். ஏனெனில், அது தொடை தசைகளை வலுவடையச் செய்து, கூடுதலான கொழுப்பையும் குறைக்கச் செய்கின்றது.

உத்தித ஹஸ்த பதாங்குஷ்தாசனா

* இந்த ஆசனம் செய்யும் போது முதுகெலும்பு நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும், கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்க வேண்டும்.

* இடது காலின் துணையில் வலது காலை நேராக தூக்கவும்.

* சில நிமிடங்கள் முச்சடைத்த பின்னர் இன்னொரு காலில் செய்யவும்.

* இந்த ஆசனங்கள் இடையையும், தொடையையும் எளிதாக குறைக்கச் செய்யும்.

டீப் ஸ்குவாட்ஸ்

* இந்த யோகா தொடைகளில் மாயங்கள் செய்யும்.

* அதற்கு கால்களை 12 இன்ச் அளவு இடைவெளி விட்டு நிற்கவும். கைககளை முன்னால் கொண்டு வந்து, தரையை பார்க்கும் படி வைக்கவும்.

* அதே நிலையில், மூச்சை உள்ளிழுத்து, உட்காரும் நிலைக்கு வரவும். மேலும் உங்களது கால்கள் 90 டிகிரி கோணத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

* மூச்சை வெளியேற்றும் போது, பழைய நிலைக்கு உடனே திரும்பவும். பின்னர், மீண்டும் செய்யவும்.