கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான்.
பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும்.
ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும்.
ஆண்களுக்கு கொழுப்பு அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது.
பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும், தொடைகளும் குறையாது.
ஏனெனில் அந்த இடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும்.
ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.
எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.
ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.