Home உறவு-காதல் உங்க துணைக்கு அடிக்கடி ‘கட்டிப்பிடி’ வைத்தியம் பண்ணுங்கப்பா…

உங்க துணைக்கு அடிக்கடி ‘கட்டிப்பிடி’ வைத்தியம் பண்ணுங்கப்பா…

63

அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. அதிலும் காதலில் விழுந்த பின்னர் அன்பை பெரும்பாலும் முத்தம் கொடுத்து வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் முத்தத்தை விட கட்டிப்பிடிப்பது தான் மிகவும் முக்கியமானது என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஆம், முத்தம் கொடுப்பதை விட, லேசான உரசல்களுடன் கூடிய கட்டிப்பிடிப்பது இதயத்தை வருடுபவையாக இருக்கும்.

வேண்டுமானால், திருமணமாகி பல வருடங்களாகி இருக்கும் தம்பதியர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் கட்டிப்பிடிப்பதால் உறவில் என்ன விதமான நன்மைகள் கிடைக்கின்றன என்று சொல்வார்கள். ஏனெனில் கட்டிப்பிடிப்பதால், உறவுகளுக்குள் நிறைய நன்மைகள் விளையும். எப்படியெனில் கட்டிப்பிடிக்கும் போது காதலர்களின் உடலுக்குள் ஆக்ஸிடாசின் என்னும் ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இவை மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கொடுப்பவையாகும். அதுமட்டுமின்றி, இந்த கட்டிப்பிடிக்கும் முறையானது உறவை வலுவாக்கவும் செய்யும்.

இங்கு அப்படி துணையை அவ்வப்போது கட்டிப்பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் உங்கள் துணைக்கு முத்தம் கொடுக்கும் முன் மென்மையாக அவர்களை அணைத்து கொடுங்கள். இதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

புது காதலர்களுக்கு…
நீங்கள் புதிய காதலர்களா? உங்கள் காதலிக்கு அவ்வப்போது ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் அவர்கள் அழகாக வரும் நாட்களில், அவர்களை மெல்லக் கட்டிப்பிடித்து, அவர்களின் காதுகளில் இன்று நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லுங்கள். அதன் பின் உங்கள் இருவருக்கும் உள்ள அன்யோன்யம் எப்படி இருக்கிறது என்று என்று பாருங்கள்.

சண்டைகளை மறக்க வைக்கும்…
உங்கள் துணையுடன் போனில் கடுமையாக சண்டை போட்டிருந்தால், அவர்களை மறுநாள் சமாதானப்படுத்த சிறந்த வழி அவர்கள் அருகில் சென்று ரொமான்ஸாக கட்டிப்பிடிப்பது தான். இதனால் அவர்களின் கோபமானது மறைந்துவிடும். பின் அவர்களே உங்களிடம் வந்து சிரித்து பேசுவார்கள்.

ஆழமான காதலை உருவாக்கும் …
கட்டிப்பிடிப்பது என்பது இருவரின் மனதிலம் காதலின் அளவை அதிகரித்து, இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் ஸ்பெஷலான மனிதராக காட்டி, ஆழமான காதலை உருவாக்கும்.

பாதுகாப்பை உணர வைக்கும் …
கட்டிப்பிடிப்பது என்பது ஒருவித பாதுகாப்பை உணர வைக்கும். அதிலும் ஒருவன் தன் காதலியை கட்டிப்பிடிக்கும் போது, காதலியானவள் மிகுந்த பாதுகாப்பை உணர்வாள். அத்துடன் அப்போது எழும் உணர்ச்சியை சொல்ல வார்த்தைகளே இருக்காது.

மன அழுத்தத்தை போக்கும்….
கட்டிப்பிடிப்பது என்பது உடலில் ஒருவித நேர்மறையான ஆற்றலை உருவாக்கும். இதனால் மனதில் உள்ள அழுத்தங்கள் மற்றும் டென்சன் நீங்கிவிடும். எனவே நீங்கள் மன அழுத்தத்திலோ அல்லது கஷ்டமான தருணத்தை உணரும் போதோ, உங்கள் துணையை கட்டிப்பிடியுங்கள். அனைத்தும் பறந்தோடிவிடும்.

அக்கறையைக் காட்டும்….
காதலில் விழுந்த பெண்களுக்கு எப்போதுமே அவர்களின் துணையின் ஞாபகம் இருந்தவாறு இருக்கும். மேலும் தன் துணையிடம் இருந்து அதிகப்படியான அக்கறை மற்றும் அன்பை எதிர்பார்ப்பார்கள். எனவே அத்தகையவற்றை அவர்களை மென்மையாக கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிக்காட்டி உணர வைக்கலாம்.

புன்னகையை மலர வைக்கும்…
உங்கள் துணையின் முகம் வாடி உள்ளதா? அவர்களை எப்போதும் புன்னகை முகத்துடன் காண வேண்டுமானால், அவர்களை கட்டிப்பிடியுங்கள். இதனால் உங்கள் துணையின் மனதில் உள்ள அனைத்தும் வெளியேறி, முகத்தில் புன்னகை பூக்கும்.

துணையின் மணத்தை உணரலாம்…
பொதுவாக ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான மணம் வீசும். உங்கள் துணையின் மணத்தை நீங்கள் அவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் உணரலாம். இதனால் இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பு அதிகரிக்கும்.

தைரியத்தை அதிகரிக்கும்….
நீங்கள் மனம் தளர்ந்து இருக்கும் போது, உங்கள் துணையை கட்டிப்பிடித்து, அவர்களிடம் மனதில் உள்ள கஷ்டத்தை சொல்லுங்கள். இதனால் நீங்கள் இழந்த மனம் ரிலாக்ஸ் ஆகி, தெளிவடைந்து மீண்டும் மனத் தைரியமானது மீட்கப்படும்.

இந்த பக்கத்தில் பார்த்து தீர்வு கிடைக்கும் உபயோகமான பதிவை LIKE செய்து SHARE செய்யுங்கள். நீங்கள் உபயோகித்து பயன் பெற்றதை நாகரிகமான முறையில் comments செய்யுங்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.