Home ஆரோக்கியம் உங்க உடம்புல ரத்தம் கம்மியா இருக்குன்னு நினைக்கறீங்களா?… அப்போ இத பண்ணுங்க…

உங்க உடம்புல ரத்தம் கம்மியா இருக்குன்னு நினைக்கறீங்களா?… அப்போ இத பண்ணுங்க…

28

உங்கள் உடல் பலவீனமாக இருப்பதுபோல் உணர்கிறீர்களா? உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பிரச்னை மிக அதிகமாகவே உள்ளது.

ஹீமோகுளோபின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, இரும்புச்சத்து குறைவாக இருத்தல், மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மெதுவாக இருத்தல் போன்றன அவற்றில் மிக முக்கியமானவை. இந்த பிரச்னைகள் பெண்களுக்கு ரத்தசோகையை ஏற்படுத்தும். அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.

முறையான உணவு தான் ஆரோக்கியப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வாக அமையும். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதென்றால் அதற்கு முதல் காரணம் சரியான உணவு எடுத்துக் கொள்ளாததுதான். இரும்புச்சத்து குறைவாக உள்ளதுதான் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம். அதனால் ரத்தசோகையில் பாதிக்கப்பட்டிருந்தால் மிக அதிக அளவில் இரும்புச்சத்துடைய உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் ஆட்டிறைச்சி, ஸ்பின்னக், அன்னாசிப்பழம், உலர்ந்த பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அளவை அதிகரிக்கச் செய்யும்.

இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தினை போன்ற தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து 5 வாரங்கள் தினை, வரகு போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நிச்சயம் ஹீமோகுளோபின் அளவு கூடியிருப்பதை அறிவீர்கள்.

குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவில் முட்டையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உடலுக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கிறது. முட்டையோடு பால், மோர், தயிா், பன்னீர், சீஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்களைப் பொருத்தவரையில், தர்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இவை ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.