ஆண்மைக்குறைவு என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாக உள்ள பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு என்னதான் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், நம்முடைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம்.
வால்நட்டை ஆண்கள் தங்களுடைய டயட்டில் தினமும் சேர்த்துக் கொள்வதால், ஆண்மையை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
ஆண்மைக்குறைவு என்பது இல்லற வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும். அது வெறும் உடல் சுகம் பற்றிய பிரச்னையாக மட்டுமல்லாது, எதிர்காலச் சந்ததிகளை உருவாக்குவதிலும் சிக்கலை ஏற்படுத்துவதால், இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
2012 ஆம் ஆண்ட மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தினமும் தங்களுடைய உணவில் 75 கிராம் வரை வால்நட்டை எடுத்துக் கொண்ட 21 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்களின் ஆண்மைத்தன்மை அதிகரித்தது தெரிய வந்தது. இந்த வால்நட்டைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்ததால் அவர்களின் விந்தணுக்கள் உறுதியடைந்திருந்ததையும் அந்த ஆய்வு உறுதி செய்தது.
உலகம் முழுவதிலும் 70 மில்லியன் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
வால்நட்டில் உள்ள ஆல்பா – லியோலெனிக் என்னும் அமிலம் குறிப்பாக, விந்தணுக்களைப் பலப்படுத்தவும் ஆண்மையை விருத்தியடையவும் செய்கிறது.
உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவி செய்யும் இயற்கை பொருள் அக்ரூட்
குறிப்பாக, ‘வால்நட்’ எனப்படும் வாதுமைப் பருப்பில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும்போது தனி ருசி கொடுக்கும் வாதுமைப் பருப்பில் அதிக அளவு மெலட்டின் சத்து உள்ளது. நல்ல தூக்கத்துக்கு இது அவசியமாகும். இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் வாதுமைப் பருப்பு மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.
அக்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம். இதில் உள்ள ஒமேகா 3 இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைக் கூட்டுகிறது.
ஒமேகா 3 மூளைக்கும் நல்லது. அதோடு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அக்ரூட் உதவுகிறது. ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து காக்கிறது.
அக்ரூட்டில் உள்ள அமிலம், எலும்பை பலப்படுத்த உதவுகிறது. போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் அக்ரூட்டில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது.