ஆணுறுப்பின் முனையில் பருக்களா?எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.
இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.
இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும்தேவையும் இல்லை.
அதையும் தாண்டி இவற்றை நீக்கத் தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அந்தரங்க உறுப்பை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் மிகவும் சோம்பேறி. இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சாதாரணமாக நினைப்பார்கள்.
ஆனால் இப்படி அக்கறை எடுத்துக் கொள்ளாமல இருந்தால், அப்பகுதியில் சீக்கிரம் தொற்றுகள் ஏற்படக்கூடும். அதிலும் அப்பகுதி எப்போதும் காற்றோட்டமின்றி இருப்பதால், அதிகம் வியர்த்து, அதனால் அப்பகுதியில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளரக்கூடும்.
மென்மையான சோப்பு.
ஆணுறுப்பு மிகவும் சென்சிடிவ்வானது. எனவே மிகவும் கவனமாக அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆண்குறியின் முனையில் தான் அதிக அழுக்குகள் சேரும். மேலும் அவ்விடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகும். எனவே அவ்விடத்தை மென்மையான சோப்பு கொண்டு தினமும் தவறாமல் கழுவ வேண்டும். மேலும் ஜிம் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்ததும் கழுவ வேண்டியது முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகம் வியர்த்திருப்பதால், கழுவ வேண்டும்.
ட்ரிம்/ஷேவிங்.
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவிங் செய்துவிட வேண்டும். ஏனெனில் முடி இருந்தால், அதிகம் வியர்க்கும். அதுமட்டுமின்றி முடி அதிகம் இருந்தால், அப்பகுதியில் பொடுகு, பேன் போன்றவை தாக்கக்கூடும். எனவே மாதம் ஒருமுறை தவறாமல் ட்ரிம் அல்லது ஷேவிங் செய்ய வேண்டும்.
உடலுறவுக்கு முன் மற்றும் பின்.
உடலுறவு கொள்ளும் முன்னும் சரி, பின்னும் சரி, மறக்காமல் கழுவ வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். முக்கியமாக உடலுறவுக்கு முன் ஆண்கள் கழுவ வேண்டியது அவசியம். ஏனெனில் ஆண்குறியின் முனையில் இருக்கும் ஒருவித திரவமானது துணைக்கு தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே தவறாமல் உறவுக்கு முன்னும், பின்னும் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
ஆண்குறியின் மேல்தோல்.
ஆண்குறியின் மேல்தோலுக்கு அடியில் சுத்தமாக கழுவ வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் அந்த இடம் தான் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்வதோடு, சேரவும் செய்யும். முக்கியமாக அந்த இடத்தை கழுவும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இரவில் காற்றோட்டம் கொடுங்கள்.
அந்தரங்க பகுதியில் காற்றோட்டம் இருக்கும் படி செய்ய வேண்டியது அவசியம். அதற்கு இரவில் படுக்கும் போது, உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும். இதனால் அப்பகுதியில் வியர்ப்பதை தவிர்ப்பதோடு, துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்கலாம்.
கடுமையான துர்நாற்றம்.
ஆணுறுப்பின் முன் பகுதியில் மாவுமாவாக உள்ள ஸ்மெக்மா என்ற மாவுப்பொருள் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அது ஆண்குறியை சிவக்கச் செய்வதோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த ஸ்மெக்மா ஆணுறுப்பு புற்றுநோயைக் கூட உண்டாக்கும்.
உள்ளாடை.
தினமும் குளிக்கும் போது உள்ளாடையை வெறும் நீரில் அலசாமல், சோப்பு பயன்படுத்தி, சுடுநீரில் அலசி உலர வைக்க வேண்டும். குறிப்பாக காட்டன் உள்ளாடையைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் வியர்வையை காட்டன் உறிஞ்சி, அவ்விடத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.