Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்களுக்கு தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி..?

உங்களுக்கு தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி..?

59

10371479_983427251668555_5579611967930217861_n-300x300-585x585பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும். ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.

பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர்.

இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?
ஆனால் தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இங்கு அசிங்கமாக காணப்படும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தொங்கிக் காணப்படுவதைத் தடுக்கலாம்…..

புரோட்டீன் உணவுகள்
உடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக்கென்று வைத்துக் கொள்ளலாம்.

செஸ்ட் பிரஸ்
தரையில் படுத்துக் கொண்டு டம்பெல்லை மார்பகங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடிக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இதுப்போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.

புஷ் அப்
குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பகங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுப்போன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.

மசாஜ்
தினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும்.

ஐஸ் மசாஜ்
ஐஸ் கட்களை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.

முட்டை மாஸ்க்
ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, மார்பகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் மாஸ்க்
வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது வெண்ணெய், க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் போது ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் அதனை மார்பகங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் தொங்கி காணப்படும் மார்பகங்களை சரிசெய்யலாம். அதிலும் இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.

தவறான பிரா
மார்பகங்களுக்குப் பொருந்தாத அல்லது மிகவும் லூசான பிராவை அணிந்தாலும், மார்பங்களானது தொங்க ஆரம்பிக்கும். ஆகவே சரியான பிராவை அணிவதோடு, பெரிய மார்பகங்கள் இருப்பவர்கள், பேடு கொண்ட ஸ்பெஷல் பிராவை அணிவது நல்லது……!