Home குழந்தை நலம் இளம்வயது ஆண்பிள்ளைகளுக்கு குரல் ஏன் மாறுகிறது?

இளம்வயது ஆண்பிள்ளைகளுக்கு குரல் ஏன் மாறுகிறது?

50

குரல் உருவாகும் விதம் (Mechanics of voice production)
நமது தொண்டையில் உள்ள குரல்வளையின் வழியாக காற்று பலமாக செல்லும்போது குரல் உருவாகிறது. குரல்வளையில் குரல் நாண்கள் எனப்படும் குருத்தெலும்புகளின் இரண்டு தொகுதிகள் உள்ளன. குரல்வளை வழியாக காற்று பலமாகச் செல்லும்போது, இந்த இரண்டு குரல் நாண்களும் அதிர்ந்து ஒலியை உருவாக்குகின்றன. இந்த குரல் நாண்களில் உள்ள இறுக்கத்தை மாற்றுவதன் மூலம் நமது குரல் மாறுபடுகிறது. நமது வாய் மற்றும் நாக்கைப் பயன்படுத்தியும் ஒலியில் மாற்றம் செய்தும் சொற்களை உருவாக்குகிறோம்.

பிறக்கும்போது, ஆண்கள் மற்றும் பெண்களின் குரல் நாண்களும் ஒரே நீளம் கொண்டவையாகவே இருக்கும், ஆனால் வயது அதிகரிக்கும்போது, பெண்களை விட ஆண்களின் குரல் நாண்கள் வேகமாக வளர்ச்சியடைகின்றன. ஆண்களில் பெரியவர்களுக்கு, குரல் நாண்களின் சராசரி அளவு 1. 75 செ. மீ. முதல் 2. 5 செ. மீ. வரை இருக்கும், ஆனால் பெண்களின் குரல் நாண்கள் மிகச் சிறியதாக இருக்கும், அவை 1. 25 செ. மீ. முதல் 1. 75 செ. மீ. வரையே இருக்கும்.
ஆண்கள் மற்றும் பெண்களின் குரல் நாண்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டின் காரணமாக, குரலின் சுருதி வேறுபடுகிறது. ஆண்கள் நீளமான, தடிமனான குரல் நாண்களை கொண்டுள்ளதால் பெண்களை விட குறைந்த சுருதி கொண்ட குரல் (தடிமனான) கொண்டுள்ளனர்.

பருவமடையும்போது ஏற்படும் மாற்றங்கள் (Changes during puberty)
‘குரல் மாற்றம்’ அல்லது ‘குரல் உடைதல்’ என்பது ஆண்கள், பெண்கள் இரு பாலருக்குமே பருவமடையும் சமயத்தில் நடக்கும். ஆனால் ஆண்களுக்கு வித்தியாசம் நன்றாகத் தெரியும். இந்த மாற்றங்கள் பெரும்பாலான குழந்தைகளுக்கு சுமார் 11 முதல் 15 வயது காலத்தில் ஏற்படும். சிலருக்கு சீக்கிரமே நடக்கலாம் அல்லது தாமதமாக நடக்கலாம். பருவமடையும்போது அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குரல் நாண்களின் நீளத்தை அதிகரித்து, அவற்றைத் தடிமனாக்குவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. அத்துடன், முகத்தின் எலும்புகள், சைனஸ் பகுதியில் உள்ள குழிகள், மூக்கு மற்றும் தொண்டை ஆகிய பகுதிகளும் வளர்வதால் ஒலி ஒத்ததிர்வடைய அதிக இடம் கிடைக்கிறது.
குரல்வளையில் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு ஆணின் உடல் ஈடுகொடுத்து சில மாற்றங்கள் ஏற்படும்போது, குரல் மாறலாம் அல்லது உடையலாம். முதலில், குரலின் சுருதி குறைவதைக் கவனிக்கலாம். ஒவ்வொரு முறை பேசும்போதும் குரல் உடைவதில்லை. சில சமயம் குரலைக் கட்டுப்படுத்த சிரமமாக இருக்கலாம், சில சமயம் குரல் கீச்சிடலாம். இப்படிக் குரல் மாறுவது அல்லது உடைவது என்பது குறுகிய காலமே நீடிக்கும், பொதுவாக சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும். அது முடியும்போது குரல் தடிமனாகவும் ஆழமாகவும் பெரியவர் குரல் போலவும் மாறியிருக்கும்.

என் குரல்வளைக் கூர் (ஆதாமின் ஆப்பிள்) ஏன் துருத்திக்கொண்டு தெரிகிறது? (Why is my Adam’s apple getting prominent?)
குரல்வளையின் முன் பகுதியில், தைராய்டு குருத்தெலும்பு எனும் குருத்தெலும்பு உள்ளது, அதுதான் குரல்வளையைப் பாதுகாக்கிறது. இந்தக் குருத்தெலும்பில் தைராய்டு குருத்தெலும்பின் கோணத்தில் இதன் எலும்பு சற்று நீட்டிக்கொண்டு இருக்கும். இதை குரல்வளைக் கூர் (அல்லது ஆதாமின் ஆப்பிள்) என்று கூறுகிறோம். இந்த எலும்புகள் தோலுக்கு அடியில் நன்கு தெரியும்படி இருக்கின்றன.
பருவமடையும்போது, குரல்வளையுடன் சேர்ந்து தைராய்டு குருத்தெலும்பும் வளர்கிறது. இதன் விளைவாக, குரல்வளைக் கூரும் அளவில் பெரிதாகிறது. இந்த மாற்றங்கள் ஆண்களுக்கு நன்கு தெரியும்படி இருக்கும், ஏனெனில் பெண்களின் தைராய்டு குருத்தெலும்பின் கோணம் பெண்களை விட ஆண்களுக்குக் குறைவானது. இதன் விளைவாக, ஆண்களுக்கு குரல்வளைக் கூர் நன்கு வெளியில் தெரியும்படி துருத்திக்கொண்டு இருக்கும்.