Home சூடான செய்திகள் இல்ல‍றத்தில் இடைத்தரகர்கள் எதற்கு ? ? ?

இல்ல‍றத்தில் இடைத்தரகர்கள் எதற்கு ? ? ?

17

images (1)தம்பதியரிடையே எழும் சின்னச் சின்ன உரசல்கள்தான் பூதாகரமாக பார்க்கப்படுகின்றன. உறவுகளிடை யே விரிசல்கள் விழாமல் இருக்க தங் கமான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவு றுத்தியுள்ளனர் அவற்றை படியுங்க ளேன்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாய் திகழ்வது பணம்தான். பணத்தினால் தம்பதியரிடையே பிரச்சினை எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவில் சிக்கல்கள் இருந்தால் தான் தம்பதியரிடையே விரிசல்கள் விழும். எனவே உங்களின் செக்ஸ் உறவில் நெருப்பு அணைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங் கள். ஏதோனும் தொய்வு ஏற்பட்டால் அன்பி ன்மூலம் உங்களின் ரொமான்ஸ் வாழ்க்கை யை புதுப்பித்துக் கொள் ளுங்கள்.
மரியாதை இல்லாத வார்தைகளை ஒருவ ருக்கொருவர் உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் ஒருவரை உதாசீனப்படுத்தும் வகையில் பேசுவதால் உற வில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்க ள்.
குழந்தைகளை கவனித்துக் கொள்வதி ல் இருவருக்குமே சரி பங்குண்டு. என வே குழந்தைகளை வளர்ப்பதன் பொரு ட்டு இருவருக்கும் இடையே பிரச்சி னைகள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எதிர்பாலின நண்பர்கள் இருப்பது இயல்புதான். அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறோம், நடந்துகொள்கிறோம் என்று கூறிக்கொண்டு சொந்த வாழ் க்கையில் சிக்கலை உண்டு பண்ணி விட வேண்டாம்.
உங்களுடைய கோபம், வலி, வேத னை எதுவோ அதனை உள்ளுக்குள் வைத்து புழுங்கி சாகவேண்டாம். அதுவே பின்னர் வெடித்து பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும். என வே எதுவென்றாலும் உங்களுக்குள் நேருக்கு நேராக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவ ர் செய்துகொடுத்த சத்தியத்தை மீறவேண் டாம். குடும்பவாழ்க்கையில் பொய் கூற வேண்டாம். ஏனெனில் அது குடும்ப வாழ் க்கையில் சூறாவளியை உண்டு பண்ணி விடும். உங்களின் பழைய தவறுகளை மீண்டும் கிளறிவிட்டுவிடும்.
நீங்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்கவேண்டும் என்றுதான் உங்களின் வாழ்க்கைத்துணை விரும்புவார். சோம் பேறித்தனம் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் எச்சரிக்கை.
தண்டனை தருகிறேன் பேர்வழி என்று கடு மையான சொற்களால் பேசுவதோ, உணர்வுரீதியாக வலிகளை ஏற்படு த்துவதோ கூடாது. எந்த பிரச்சினைக்கும் தண்டனை மட்டுமே தீர்வாகாது.
உடல்காயங்கள் விரைவில் ஆறிவிடும். அதே சமயம் மனதில் ஏற்படு த்திய காயமோ , வலியே ஆறாத வடுவாக தங்கிவிடும். இது இல்லறத் தில் நிரந்தர மான பிரிவை கூட ஏற் படுத்திவிடும். எனவே உங்களுக்கு இடையே ஏற்ப டும் பிரச்சினைகளை பெரிதாக விடாமல் நீங்களே பேசி தீர்வு காணுங்கள். இல்லறத்தில் இடைத்தர கர்களை அனுமதிப்பது ஆபத்து என்பதை என்றை க்கும் மனதில் கொள்ளுங்கள்.