Home குழந்தை நலம் இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

36

22-1411380846-4-twinsஇரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல.

இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று சொல்ல முடியாது. அது கருமுட்டை மற்றும் விந்துவை பொறுத்ததுடன், பெண்ணின் பரம்பரையில்

யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. இப்போது இந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி காண்போம்.

ஒட்டி பிறக்கும் குழந்ததைகள்

ஒருவேளை கருமுட்டையானது முழுமையாக இரண்டாக பிரியாமல் போனால் தான், குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இந்த செயல்பாட்டில் ஒரு கருமுட்டையும், ஒரு விந்தணுவும் மட்டும் இருப்பதால் தான், இந்த வகையான இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்.

இருப்பினும் இவர்களுக்கிடையேயும் ஒருசில வேறுபாடுகள் இருக்கும். அதில் ஒன்று குழந்தைகளுக்கு செல்லும் ஊட்டச்சத்துக்களின் அளவைப் பொறுத்து, அவர்களுக்கிடையே சிறு வேறுபாடுகள் தென்படும்.

இரட்டையர்களின் வகைகள்

இரட்டை குழந்தைகளிலேயே இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

1. வேறுபாடுள்ள இரட்டை.

2. ஒன்று போலிருக்கும் இரட்டை

1. வேறுபாடுள்ள இரட்டையர்கள்

பெண்களுக்கு மாதந்தோறும் ஒரே ஒரு சூல்முட்டை வெளிப்படும். சில சமயங்களில் இரண்டு சூல்முட்டைகள் வெளிப்படும்.

அப்படி வெளிப்படும் தருணம், பெண் உறவில் ஈடுபட்டால், இரண்டு சூல்முட்டைகளில் இரு வேறு விந்தணுக்கள் நுழைந்து குழந்தைகளாக உருவாகின்றன. ஆனால் இந்த வகையான இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒன்று போல் காணப்படமாட்டார்கள் மற்றும் அவர்களின் பண்புகளும் வேறுபட்டு காணப்படும்.

2. ஒன்று போலிருக்கும் இரட்டையர்கள்

இந்த வகையான இரட்டையர்களைப் பார்த்தால், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதாவது இந்த வகை குழந்தைகள் ஒரே ஒரு விந்தணுவின் மூலம் பிறப்பார்கள்.

அதாவது ஆணிடமிருந்து வெளிப்படும் ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் ஒரே ஒரு செல் மட்டும் கருமுட்டையினுள் சென்று இணையும். அப்படி இணையும் போது சில சமயங்களில் இயல்புக்கு மாறாக கருமுட்டையானது இரண்டாக பிரியும். இப்படி இரண்டாக பிரிந்த கருமுட்டை குழந்தைகளாக உருவாகும்.

இரட்டை கருவை சுமப்பது பற்றிய சில கட்டுக்கதைகள்!!!

உங்களுக்கு இரட்டை குழந்தைகள் என மருத்துவர்கள் உறுதியளித்து விட்டார்கள் என்றால், உங்கள் மனதில் எழும் எண்ணங்களில், இரட்டை குழந்தை கர்ப்பத்தை பற்றிய கட்டுக்கதைகளும் ஒன்றாகும். இரட்டை குழந்தைகளை கருத்தரிப்பதை பற்றிய கட்டுக்கதைகள் கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும்.

இந்த நேரத்தில் தான் கர்ப்பிணி பெண்கள் போதிய ஓய்வில் இருந்து, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் மனதில் இந்த கட்டுக்கதைகள் எழும் போது, அப்படி இருப்பது கொஞ்சம் கஷ்டமே.

பெண்ணின் குடும்பத்தில் ஏற்கனவே இரட்டை குழந்தை பிறந்திருந்தால், அந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. 10,000-ல் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எல்லாம் அரிதாக நடப்பவை. உங்கள் கருவில் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதை குழந்தைகள் பிறந்தவுடன் DNA சோதனை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்.

சரி கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக சொல்லும் சில கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

கட்டுக்கதை 01

பொதுவாக கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக சொல்லும் சில கட்டுக்கதைகளில் இது முதன்மையானது. பல கர்ப்பிணி பெண்களுக்கு புரட்டல் ஏற்படுவது வழக்கம். ஆனால் உங்களுக்கு புரட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், உங்களுக்கு இரட்டை குழந்தைகளாக இருக்கலாம்.

கட்டுக்கதை 02

ஒரு தலைமுறை இடைவெளியில் தான் இரட்டை குழந்தைகள் பிறக்கும். இரட்டை குழந்தைகள் பற்றிய மற்றொரு கட்டுக்கதை இது. இருப்பினும் இது எப்போதுமே தாயின் குடும்பத்தை பொறுத்து அமையாது. தந்தையின் குடும்ப பின்னணியிலும் இது ஏற்படலாம்.

கட்டுக்கதை 03
இரட்டை குழந்தைகள் அனைத்தும் குறைப்பிரசவத்தில் பிறக்கும். இரட்டை குழந்தைகளை பற்றிய மற்றொரு பொதுவான கட்டுக்கதை இது. மேலும் இரட்டை கருவை சுமப்பதால், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

22-1411380846-4-twins இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்? 22 1411380846 4 twins

கட்டுக்கதை 04
இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வாய்ப்பே இல்லை. குழந்தைகள் பிறந்தவுடன், இந்த கட்டுக்கதையை எண்ணி அனைத்து பெற்றோர்களும் வருத்தப்படுவதுண்டு. இருப்பினும் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமே.
கட்டுக்கதை 05
இரட்டை குழந்தைகள் பற்றிய மற்றொரு கட்டுக்கதை, பிறப்பு குறைபாடுகள். அதிலும் இரண்டு குழந்தைகள் இல்லாவிட்டாலும் ஒன்று மட்டுமாவது குறையுடன் பிறக்கும்.
இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றிய சில கட்டுக்கதைகளே இவைகள். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது. காரணம் இவைகள் கர்ப்ப காலத்தில் உங்கள் மனநிலையை பாதிக்கும்.

இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!
குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு ஆனந்தம். அதுவும் இரட்டை குழந்தை என்றால் கேட்கவா வேண்டும். போனசாக ஒரே சமயத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்தால், அதை விட சந்தோஷம் என்ன இருக்க முடியும்.
நீங்கள் இரட்டையர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு ஏற்றதாகும். ஆம், உங்களை பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆவல் இருக்கிறது அல்லவா? இரட்டை குழந்தைகளை பெற்றவர்களை அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை கேட்டிருப்போம்.
அதற்கு காரணம் இரட்டையர்களில் ஒரு குழந்தை தாயை போலவும், மற்றொரு குழந்தை தந்தையை போலவும் பிரதிபலிக்கும்.
சில நேரங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரி வாழ்க்கையை தான் வாழ்வார்கள், அது அவர்களின் குணங்களாகட்டும் அல்லது உருவமாகட்டும். வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்களை விட ஒரே மாதிரியான இரட்டையர்கள் பொதுவாக குறைவு தான்.
நீங்கள் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்களில் ஒருவரா? அப்படியானால் மேலும் படித்து உங்களை பற்றியும் உங்களின் உடன்பிறப்பை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
இரட்டையர்களை பெற்றவர்களை சந்தித்து அவர்களிடம் கேட்டால், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதை விட, வேறு எந்த சொர்க்கமும் இல்லை என்று கூறுவார்கள்.
இருப்பினும் இரட்டையர்களுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்களுக்கு இடையே உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே டி.என்.ஏ-வை கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்காக அவர்கள் ஜெராக்ஸ் காப்பியோ, கார்பன் காப்பியோ அல்ல. கண்டிப்பாக அவர்களுக்கு இடையே பல வேறுபாடுகள் இருக்கும்.
மேற்கூறிய தகவலை போல இன்னும் உங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாமா? ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றவர்களா நீங்கள்? அப்படியானால் நாங்கள் கூறுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
தாய் நீண்ட ஆயுள் பெறுவார்கள்
ஒற்றை குழந்தையை பெற்ற தாயை விட, இரட்டையர்களை பெற்ற தாய் தான் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
இரட்டை குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள், ஒற்றை குழந்தையை பெற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உயிர் வாழ்வார்கள் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
30 வயதிற்கு மேல் அதிக வாய்ப்பு உள்ளது
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 30 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால், உடல் ரீதியாக கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வேறுபட்ட கைரேகை
ஒரே மாதிரியான இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியுமா உங்களுக்கு? அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான டி.என்.ஏ இருக்கும். இருப்பினும் அவர்களுக்கு ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. இந்த தகவல் உங்களுக்கு இதற்கு முன் தெரியுமா?
இடது கைப்பழக்கம்
இரட்டையர்களை பற்றிய இன்னொரு பொதுவான தகவல். அவர்கள் பொதுவாக இடது கைப்பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.
மீண்டும் இரட்டைக்கு வாய்ப்பு உள்ளது
நீங்கள் ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றிருந்தால், உங்கள் அடுத்த பிரசவத்திலும் ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றெடுக்க வாய்ப்பு உள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதிலும் அதற்கு 50 சதவீத வாய்ப்பும் உள்ளதாம்.
வித்தியாசமான பேச்சு
உங்களான மற்றொரு சுவாரஸ்யமான தகவல். இரட்டை குழந்தைகள் அவர்களுக்கென, மற்ற யாருக்கும் புரியாத, ஒரு தனி பாஷையை உருவாக்கி கொள்வார்களாம்.
உங்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளார்கள் என்றால், அவர்கள் பேசுவதை கவனியுங்கள். அவர்களின் பேச்சில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் சத்தம் அடங்கிய உணர்வு வெளிப்பாட்டை காண நேரிடலாம்.