பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனை இது, வெளியிடங்களுக்கு சென்றாலும், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும், பொது இடங்களிலும் இருக்கும் போதும், போது கழிவறைகளில் சிறுநீர் கழிப்பது என்பது அவர்களுக்கு நரக வேதனை ஆகும்.
பலர் பயன்படுத்தும் அந்த கழிவறைகளில் கண்டிப்பாக பாக்டீரியாக்கள் அதிகமாக பரவும். அப்படி பட்ட இடங்களில் பெண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும் போது கண்டிப்பாக பலவகையான பிறப்புறுப்பு தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இதனால், பெரும்பாலான பெண்கள் இவ்வாறான தருணங்களில் சிறுநீர் கழிக்கவே முற்பட மாட்டார்கள். மாறாக நீராகாரங்களை குறைத்துக் கொள்வார்கள். காலம் காலமாக பெண்கள் அவதிப்பட்டு வரும் இந்த பிரச்சனைக்கு தான் , தீர்வு கண்டுப்பிடித்துள்ளனர் மூன்று டெல்லி மாணவர்கள்.
அவர்கள் கண்டுபிடித்த அந்த புது உபகரணத்தை பற்றி இனி பார்க்கலாம்…
“பீ பட்டி” (Pee Buddy)
இந்த “பீ பட்டி” (Pee Buddy) என்னும் உபகரமானது காகித அட்டையினால் தயாரிக்கப்பட்டது ஆகும். இதை பெண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் போது பிறப்புறுப்பு பகுதியில் மிக எளிதாக பொருத்தி சிறுநீர் கழித்த பின் குப்பை தொட்டியில் எறிந்துவிடுலாம். இதை நின்றவாறே பயன்படுத்தலாம்.
பயன்
போது கழிவறைகளில் அமர்ந்து சிறுநீர் கழிக்கும் போது பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை பயன்படுத்துவதனால், அந்த அபாயத்தை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.
பாதிப்பு இல்லை
இது வெறும் காகித அட்டையினால் தயாரிக்கப்பட்டது என்பதனால், பெண்களுக்கு பிறப்புறுப்பில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
சுலபமாக பயன்படுத்தலாம்
இது ஒரு முறை உபயோகப்படுத்தும் “யூஸ் அண்ட் த்ரோ” பொருள் என்பதனால் இதை பயன்படுத்துவதும், லையாள்வதும் மிகவும் சுலபம்.
திறக்கவும் (படத்தில் கட்டப்பட்டுள்ள முறையில் எளிதாக பயன்படுத்தலாம்)
பொருத்தவும் (படத்தில் கட்டப்பட்டுள்ள முறையில் எளிதாக பயன்படுத்தலாம்)
சிறுநீர் கழிக்கவும் (படத்தில் கட்டப்பட்டுள்ள முறையில் எளிதாக பயன்படுத்தலாம்)
குப்பை தொட்டியில் எறிந்துவிடுவும் (படத்தில் கட்டப்பட்டுள்ள முறையில் எளிதாக பயன்படுத்தலாம்)