Home ஆரோக்கியம் Tamil Manthiram காலையில் எழுந்ததும் பல் தேய்க்காதீங்க… ஏன் தெரியுமா?…

Tamil Manthiram காலையில் எழுந்ததும் பல் தேய்க்காதீங்க… ஏன் தெரியுமா?…

28

காலையில் எழுந்ததும் நாம் பற்களைத் துலக்குவோம். ஆனால் அப்படி செய்யக் கூடாது. அதற்கான காரணங்கள் ஏனென்று தெரியுமா?…

இரவில்தான் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். தினமும் இரவில் நாம் சாப்பிடும் பிரெட், இனிப்பு, சாக்லேட், பேக்கரி பொருட்கள், சர்க்கரை, மாவுப்பொருட்கள், கேக் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பற்களின் இடையில் ஒட்டிக் கொள்ளும்.

அப்படி மாவுப்பொருள்கள் பற்களில் ஒட்டியிருக்கும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் சேர்ந்து வாயில் லாக்டிக் அமிலத்தை சுரக்கிறது. இந்த அமிலம் பற்களின் எனாமலை வலுவிழக்கச் செய்து பற்களை அரிக்கின்றன. அதனால் தான் பற்களில் சொத்தைப்பல் உண்டாகிறது.

மேலும் ஈறுகளில் வலியும் அதிகமாகும். அதனால் பற்களில் பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமானால் காலையில் எழுந்தவுடன் பற்களை சுத்தம் செய்யாமல் இருந்தால் போதும்.

நாம் சாப்பிட்டு அல்லது தொடர்ந்து வாயை ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்தாலே கிருமிகள் தங்களுடைய வேலையைத் தொடங்கிவிடும்.

இரவில் நாம் சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்திலேயே கிருமிகள் தங்களுடைய எல்லா வேலைகளையும் முடித்துவிடும். நாமோ காலையில் எழுந்து பல் துலக்குவதால் என்ன பயன்?…

அதனால் இரவு தூங்கச் செல்லும்முன் பல் துலக்கிவிட்டு தூங்க வேண்டும்.

அப்போ காலையில் பல் தேய்க்கக் கூடாதா என்று கேட்காதீர்கள். காலையில் எழுந்ததும் பேஸ்ட் கொண்டு பல் துலக்காமல் வெந்நீர் அல்லது வெந்நீரில் சிறிது உப்பு கலந்து வாய் கொப்பளிக்கவும் கைகளால் பல்லைத் தேய்த்துக் கழுவவும் செய்யலாம்.