Home பாலியல் இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பேன்

இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பேன்

40

இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் உள்ள ரோமங்களுக்கு இடையே இருந்து, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்ற சிறிய பேன் வகைகள் உள்ளன. இவை 1. 5 மி. மீ. நீளம் கொண்டிருக்கலாம். நுண்ணோக்கியில் பார்க்கும்போது இவை முன்பக்கம் இரண்டு பெரிய கால்களுடன் பார்ப்பதற்கு சிறிய நண்டுகளைப்போல் காட்சியளிக்கும்! தலையிலும் உடலின் பிற பகுதிகளிலும் இருக்கும் பேன் வகை வேறு, இவை வேறு.

இந்தப் பேன்கள் உங்கள் இரத்தத்தை உணவாக உண்டு வாழ்பவை, அவை கடிக்கும்போது அதிக அரிப்பு உண்டாகும்.

காரணங்கள் (Causes
இவை பொதுவாக, பாலியல் செய்கைகளின் போது பரவுகின்றன.
உடைகளை, படுக்கை விரிப்புகள், தலையணைகள், டவல் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதாலும் பாதிப்புள்ள ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கும் பரவக்கூடும்.
ஒருவருக்கு இந்தப் பேன்கள் வரும் சாத்தியத்தை அதிகரிக்கும் காரணிகள் (The risk factors for pubic lice include):

பலருடன் உடலுறவு வைத்துக்கொள்ளுதல்
ஏற்கனவே இந்தப் பேன் உள்ளவருடன் பாலியல் உறவு கொள்வது
பாதிக்கப்பட்ட நபருடன் உடுப்புகள், படுக்கை விரிப்புகள், தலையணை போன்றவற்றைப் பகிர்ந்து பயன்படுத்துவது
அறிகுறிகள் (Symptoms)
இந்தப் பேன்கள் இருந்தால், இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் கடுமையான அரிப்பு உண்டாகும். தொடர்ந்து இந்தப் பேன்கள் கடிக்கும்போது, அப்பகுதியில் புண்கள் ஏற்படலாம்.

தடிமனான ரோமங்களைக் கொண்ட பின்வரும் உடல் பகுதிகளுக்கும் இந்தப் பேன்கள் பரவக்கூடும்:

கால்கள்
மார்பு
அக்குள்
தாடி, மீசை
புருவங்கள் அல்லது கண்ணிமை முடிகள் (குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த அறிகுறி இருந்தால், பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்று சந்தேகப்பட வேண்டும்)
நோய் கண்டறிதல் (Diagnosis)
இனப்பெருக்க உறுப்புப் பகுதியை மருத்துவர் பார்த்து, பேன்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்வார். நகரும் பேன்கள் அல்லது முட்டைகள் இட்டிருப்பது கண்டறியப்படும்.

சிகிச்சை (Treatment)
பேன்களைக் கொல்வதற்காக, பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொண்ட லோஷன் அல்லது ஷாம்பூவை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படலாம்.

மருத்துவர் கொடுக்கும் மருந்துகளில் சில:

பூச்சிக்கொல்லி லோஷன்: பாதிக்கப்பட்ட பகுதியில் இதனைப் பூசி, 8-12 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும்.
மேலே குறிப்பிட்ட சிகிச்சையில் திருப்திகரமான பலன் கிடைக்காவிட்டால், மருத்துவர் வேறு பிற மருந்துகளை முயற்சிப்பார்.
லின்டேன் (மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே கொடுக்கப்படுகின்ற மருந்து): பிற சிகிச்சை முறைகள் தோல்வியடைந்தால் இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி, நான்கு நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
சிக்கல்கள் (Complications)
இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பேன்கள் இருந்தால், ஏற்படக்கூடிய பிற பெரிய சிக்கல்களில் சில:

சருமத்தில் நிற மாற்றம்: இந்தப் தொடர்ந்து இருக்கும் பகுதிகளில் சருமத்தில் ஆங்காங்கே நீலத் திட்டுகள் உண்டாகலாம்.
இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள்: அரிப்புள்ள இடத்தில் சொறிவதால், காயங்கள் உண்டாகலாம், மேலும் நோய்த்தொற்றுகள் உண்டாகலாம்.
கண்களில் எரிச்சல்: கண்ணிமை முடிகளில் பேன்கள் உள்ள குழந்தைகளுக்கு, கண்நோய் உண்டாகலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்களுக்கு இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பேன்கள் இருந்தால், தகுந்த சிகிச்சை பெற சரும மருத்துவரை அணுகவும்.