Home ஆண்கள் ஆண்மை பெருக இந்திய ஆண்களுக்கு விறைப்பு கோளாறு ஏற்பட காரணம் என்ன? நிபுணர்கள் தகவல்!

இந்திய ஆண்களுக்கு விறைப்பு கோளாறு ஏற்பட காரணம் என்ன? நிபுணர்கள் தகவல்!

44

இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ஆண்களுக்கு ஆண்மை கோளாறுகள் மற்றும் விறைப்புத் தன்மை கோளறுகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் ஆண்கள் செய்யும் தவறு என்பது, இந்த கோளாறுகளின் ஆரம்ப நாட்களிலேயே மருத்துவரிடம் சென்று பரிசோதனை அல்லது சிகிச்சை செய்துக் கொள்ளாதிருப்பது தான்.

இன்றைய தேதியில் இந்த பிரச்சனை உடைய 20% ஆண்கள் தான் மருத்துவர்களை கண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவித்து வருகிறார்கள். ஆண்கள் மத்தியில் ஆண்மை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை கோளாறு ஏற்பட காரணிகளாக இருப்பவை பற்றி சமீபத்தில் டெல்லி ஆய்வாளர்கள் ஓர் ஆய்வு நடத்தியுள்ளனர். அதிலிருந்து அறியப்பட்டுள்ள தகவல்கள்…

பிரச்சனை! இன்றைய இளம் ஆண்கள் மத்தியில் செக்ஸுவல் பிரச்சனைகள் மட்டுமின்றி, செக்ஸ் மீதான ஆசையும் குறைந்து தான் காணப்படுகிறது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மோசமான வளர்சிதை மாற்றத்தால் மட்டுமின்றி, கேடான வாழ்வியல் மாற்றங்களாலும் தான் ஆண்மை குறைபாடு அல்லது விறைப்புத் தன்மை கோளாறு அதிகம் எற்படுகிறது டெல்லி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தவறுகள்! இன்று பலரும் சரியான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் உட்கொள்வதில்லை. சுகாதராமற்ற, ஆரோக்கியமற்ற உணவுகள் அதிகம் சாப்பிடுவது ஆண்மை விறைப்புத் தன்மை கோளாறுகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

உறக்கம்! மேலும், சரியான அளவு, சரியான நேரத்திற்கு உறங்காமல் இருப்பதும் கூட ஆண்கள் மத்தியில் 48% விறைப்புத் தன்மை கோளாறு ஏற்பட காரணமாக இருக்கிறது என இந்த ஆய்வில் டெல்லி ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

மன அழுத்தம்! இந்த ஆய்வின் மூலம் இந்திய ஆண்கள் மத்தியில் விறைப்புத் தன்மை கோளாறு ஏற்பட 35% காரணமாக இருப்பது அளவிற்கு அதிகமான மன அழுத்தம் என்று அறியப்பட்டுள்ளது. அதிலும், முக்கியமாக இளம் வயது ஆண்கள் மத்தியில் விறைப்புத் தன்மை கோளாறு ஏற்பட இது பெரும் காரணமாக இருக்கிறது.